மாநில நலனுக்காக மத்திய அரசுடன் இணக்கம்: சொல்கிறார் தி.மு.க., எம்.பி.,
திருப்பூர்: ''மாநிலத்தின் நலனுக்காக மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்கிறோம்,'' என, தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவா பேசினார்.
தி.மு.க., அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம், திருப்பூர் வடக்கு மாநகர தி.மு.க., சார்பில் பாண்டியன் நகரில் நடந்தது.கூட்டத்தில் எம்.பி., திருச்சி சிவா பேசியதாவது: சட்டசபை தேர்தலில் அமைத்தது போல் அடுத்த லோக்சபா தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து மாநிலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம். அதே நேரம் மாநில உரிமைகளைக் காக்கவும் உரிய வகையில் குரல் எழுப்புகிறோம்.தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்ததை ஓராண்டுக்குள், 70 சதவீதம் நிறைவேற்றியுள்ளது. மீதமுள்ள வாக்குறுதிகள் இன்னும் ஓராண்டுக்குள் நிறைவேற்றப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!