dinamalar telegram
Advertisement

ஹிந்து அறநிலையத்துறை விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும்

வேலுார், ''ஹிந்து அறநிலையத்துறை விழாக்களில், தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும்,'' என, வேலுாரில் அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
வேலுார் மாவட்ட ஹிந்து சமய அறங்காவலர் குழு தலைவராக அசோகன் மற்றும் உறுப்பினர்களாக அருணாசலம், சுகுமார், தேவி, மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பதவியேற்பு விழா, வேலுார் செல்லியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு நடந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமை வகித்தார்.

இதில், அமைச்சர்
துரைமுருகன் பேசியதாவது:
இங்கு பொறுப்பேற்றவர்கள் மாவட்டம் முழுது
முள்ள கோவில்களுக்கு சரியான நபர்களை அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும். குடிகாரன், கோவில் நிலத்தை அபகரிப்பவனை பொறுப்புகளில் அமர்த்தக்கூடாது. அப்படி நியமித்தால் உங்களை பதவியிலிருந்து எடுத்து விடுவோம்.
அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் அரசு விழாக்களில், தேவாரம், திருவாசகம் பாடட்டும் கவலையில்லை. அறநிலையத்துறையும் அரசு துறை தான். அது சார்ந்த விழாவும், அரசு நிகழ்ச்சிதான். அதனால், தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும்.
இங்கு விழா ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது வருத்தம். இனி நடக்கும் விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும். வரும் நாட்களில் இதை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமென அறிலையத்துறை அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement