ADVERTISEMENT
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அடை மிதிப்பான் குளத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் கடந்த 14ம் தேதி இரவில் பாறை சரிந்து விழுந்ததில் லாரி டிரைவர்கள் 6 பேர் சிக்கினர். இதில் நேற்று தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மூலம் இருவர் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட செல்வம் என்பவர் இறந்தார். மேலும் 3 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளனர். அவர்கள் உயிரோடு இருக்கின்றனரா என்பது தெரியவில்லை. அவர்களை மீட்பதற்காக அரக்கோணத்தில் இருந்து இன்ஸ்பெக்டர் விவேக் தலைமையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 30 பேர் நேற்றிரவு திருநெல்வேலி வந்தனர். இன்று அவர்கள் கல்குவாரியில் இறங்கி மீட்புப் பணியை துவக்கினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!