அ.தி.மு.க., பெண் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி
தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி அ.தி.மு.க., பெண் தலைவர் சத்யா மீது கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தேர்தல் 2019ல் நடந்தது. மொத்தம் 17 கவுன்சிலர்களைக் கொண்ட இங்கு 12 இடங்களில் அ.தி.மு.க.,வினரும் 5 இடங்களில் தி.மு.க.,வினரும் வெற்றி பெற்றனர். அ.தி.மு.க.,வை சேர்ந்த சத்யா மாவட்ட ஊராட்சி தலைவரானார்.ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவராக இருந்த செல்வகுமார் உள்ளிட்ட அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தி.மு.க., பக்கம் சாய்ந்தனர்.

அதன் தொடர்ச்சியாக ஏப்.4ல் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் மீதான ஓட்டெடுப்பு தூத்துக்குடி கலெக்டர் செந்தில் ராஜ் முன்னிலையில் நடந்தது.
தலைவர் சத்யா உள்ளிட்ட 3 அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை. பங்கேற்ற கவுன்சிலர்கள் 14 பேரும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் சத்யா பதவியை இழக்கிறார்.
மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளரும், தி.மு.க., மாணவரணி துணைச் செயலாளருமான உமரிசங்கரின் மனைவி பிரம்மசக்தியை தலைவராக்க முயற்சி நடக்கிறது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!