dinamalar telegram
Advertisement

நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அ.தி.மு.க., தலைவர் பதவி இழப்பு

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்ட ஊராட்சி அ.தி.மு.க., பெண் தலைவர் சத்யா மீது, கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதால், அவர் பதவி இழந்தார்.
துாத்துக்குடி மாவட்ட ஊராட்சி தேர்தல் 2019ல் நடந்தது. மொத்தம், 17 கவுன்சிலர்களைக் கொண்ட இங்கு, 12 இடங்களில் அ.தி.மு.க.,வினரும், ஐந்து இடங்களில் தி.மு.க.,வினரும் வெற்றி பெற்றனர்.தலைவர் பதவி பொது பெண் பிரிவிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.க.,வை சேர்ந்த சத்யா, மாவட்ட ஊராட்சி தலைவரானார்.

இந்நிலையில், 2021 சட்டசபை தேர்தல் மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மாவட்ட ஊராட்சி துணைத்தலைவராக இருந்த செல்வகுமார் உள்ளிட்ட அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பலர், தி.மு.க., பக்கம்சாய்ந்தனர்.தொடர்ச்சியாக ஏப்., 4ல் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் மீதான ஓட்டெடுப்பு, துாத்துக்குடி கலெக்டர் செந்தில் ராஜ் முன்னிலையில் நேற்று நடந்தது.
தலைவர் சத்யா உள்ளிட்ட மூன்று அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை. பங்கேற்ற கவுன்சிலர்கள் 14 பேரும், தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் வெற்றி பெற்றது.தலைவர் சத்யா பதவியை இழந்தார்; புதிய தலைவர் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளரான கவுன்சிலர்பிரம்மசக்தியை தலைவ ராக்க, தி.மு.க.,வினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement