ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1 கோடிஅறநிலையத்துறை நிலம் மீட்பு
திருநெல்வேலி,:திருநெல்வேலி பேட்டையில் ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ. ஒரு கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.
திருநெல்வேலியில் ஹிந்து அறநிலையத்துறையின் பிள்ளையன் கட்டளை, மேடை தளவாய் கட்டளைக்கு சொந்தமான 80 ஏக்கர் விவசாய நிலம் பேட்டை முள்ளிக்குளம் பகுதியில் உள்ளது. இந்த விவசாய நிலத்திற்கு செல்லவிடாமல் பாலமுருகன் என்பவர் ஆக்கிரமித்து சுவர் கட்டி இருந்தார்.

இதுகுறித்து வந்த புகாரில் அறநிலையத்துறை செயல் அலுவலர் சிவசுந்தரேசன், திருநெல்வேலி தாசில்தார் சண்முகசுப்ரமணியன் ,இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் உள்ளிட்டோர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பாலமுருகன் மற்றும் பெற்றோர் இதற்கு எதிராக தீக்குளிக்க போவதாக கூறினர். ஆதரவாளர்களும் வந்திருந்தனர். இருப்பினும்ரூ. 1 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த சுவர் அகற்றப்பட்டு பொதுப்பாதை ஆக்கப்பட்டது. இதன் மூலம் விவசாய நிலங்களுக்கு இனி விவசாயிகள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!