dinamalar telegram
Advertisement

ரூ.2,000 லஞ்சம்: தாசில்தார் கைது

தென்காசி:வாரிசு சான்றிதழ் வழங்க, 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய திருவேங்கடம் தாசில்தார் மைதீன் பட்டாணி 50, கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் மேல சிவகாமிபுரத்தைச் சேர்ந்தவர் அழகுராஜ் 49. இவரது தாய் ராஜம்மாள் சில மாதங்களுக்கு முன் இறந்தார்.இதையடுத்து வாரிசு சான்றிதழ் கோரி திருவேங்கடம் தாலுகா அலுவலகத்தில் அழகுராஜ் விண்ணப்பித்திருந்தார். மூன்று மாதங்களாகியும் சான்றிதழ் வரவில்லை.

சான்றிதழ் தர தாசில்தார் மைதீன் பட்டாணி, 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். கொடுக்க விரும்பாத அழகுராஜ், தென்காசி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., மதியழகனிடம் புகார் செய்தார். அவரின் ஆலோசனையின்படி, நேற்று முன்தினம் மாலையில், 2,000 ரூபாயை லஞ்சமாக தாசில்தார் மைதீன் பட்டாணி வாங்கிய போது, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.நேற்று அதிகாலை 4:30 மணி வரையிலும் அவரின் அலுவலகத்தில் சோதனை நடந்தது. பின், திருநெல்வேலி மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement