dinamalar telegram
Advertisement

சொத்துக்காக முதியவர் கொலை மகள், மருமகன் உட்பட 4 பேர் கைது

ADVERTISEMENT
தென்காசி:தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே இலஞ்சியில் சொத்துக்காக முதியவர் கோட்டை மாடனை 82, கொலை செய்த மகள் ஸ்ரீதேவி, மருமகன் பரமசிவன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோட்டை மாடன் தனக்கு சொந்தமான மாந்தோப்பில் மே 4 காலையில் வாயில் துணி திணிக்கப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.கோட்டை மாடனுக்கு மைதீன் பாத், சந்திரா, ஸ்ரீதேவி என மூன்று மகள்கள் உள்ளனர். மைதீன் பாத் இலஞ்சி பேரூராட்சி தலைவராக இருந்துள்ளார். \

கோட்டை மாடன் சொத்துக்களை மூன்று மகள்களுக்கும் பிரித்து கொடுத்தார். தற்போது 2வது மகள் சந்திரா வீட்டில் வசித்தார்.அவரது மாந்தோப்பை சந்திரா மகன் விஜயகுமாருக்கு வழங்குவேன் எனக்கூறி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முதல் மகளின் கணவர் பரமசிவன் மற்றும் 3வது மகள் ஸ்ரீதேவி ஆகியோர் சேர்ந்து கோட்டைமாடனை கொல்ல திட்டமிட்டனர்.

அவரது தோட்டத்தில் வேலை செய்யும் சேகருக்கு முன்பணம் ரூ. ஒரு லட்சம் வழங்கினர்.சேகர், மகேஷ் மற்றும் வசந்தகுமார் ஆகியோரை கொண்டு முதியவரை கொலை செய்தார். குற்றாலம் போலீசார் மருமகன் பரமசிவன், மகள் ஸ்ரீதேவி, கூலிப்படையினர் மகேஷ், வசந்த குமாரை கைது செய்தனர். சேகரை தேடுகின்றனர்.

Telegram Banner
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement