மாணவி தற்கொலை ஆசிரியை சஸ்பெண்ட்
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை லட்சுமிநகர் ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் பெருமாள் மகள் ரம்யா 14, 9ம் வகுப்பு பயின்று வந்தார்.பள்ளியில் தேர்வின்போது ஆசிரியை ஒருவர் அவரை சக மாணவியர் முன் திட்டினார். மனமுடைந்த மாணவி இனி பள்ளிக்கு செல்ல மாட்டேன் எனக்கூறியுள்ளார். யாரும் இல்லாத போது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.திசையன்விளை போலீசார் விசாரித்தனர். ரம்யாவை திட்டிய ஆசிரியை ஜூலியட் ரெஜினாவை சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!