தென்காசி மாவட்ட பஞ்., கூட்டத்தில் மோதல்
தென்காசி:தென்காசியில் நடந்த மாவட்ட ஊராட்சி கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலினை ஆபாசமாக பேசிய விவகாரம் தொடர்பாக, தி.மு.க., கவுன்சிலர்கள் ஒருமையில் பேசி மோதலில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவராக இருப்பவர் தமிழ்ச்செல்வி. அவரது கணவர் சுபாஷ் சந்திரபோஸ்; ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய தி.மு.க., கவுன்சிலர்.முதல்வர் பிறந்த நாள் விழா நடத்தியது குறித்து, கட்சி நிர்வாகியிடம் இவர் பேசிய 'ஆடியோ' வெளியானது. அதில் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் குடும்பத்தினரையும் அவதுாறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது.

இப்பிரச்னையை, மாவட்ட ஊராட்சி கூட்டத்தில், தி.மு.க., கவுன்சிலர் கனிமொழி எழுப்பினார். தமிழ்செல்விக்கு ஆதரவாக தி.மு.க., கவுன்சிலர் சாக்ரடீஸ் கருத்து தெரிவித்தார்.இதனால் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. கைகலப்பு ஏற்படும் சூழல் நிலவியது. போலீசார் அவர்களை அமைதிப்படுத்தினர்.
கடந்த முறை நடந்த முதல் கூட்டத்திலேயே, உறுப்பினர்களின் அனுமதி இல்லாமல் திட்டங்களை செயல்படுத்தி, ஊழல் செய்ததாக, தமிழ்செல்வி மீது புகார் தெரிவிக்கப்பட்டது. தற்போது அவரது கணவரின் ஆபாச ஆடியோ பேச்சால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ஊராட்சி கூட்டமா ? உள்கட்சி கூட்டமா ? பங்கு பிரிக்கறதிலே தகறாரா ?