dinamalar telegram
Advertisement

36 இடங்களிலும் வெற்றி: அமைச்சர் அறிவுரை

Share
விருதுநகர்-"விருதுநகர் நகராட்சி தேர்தலில் 36 வார்டிலும் தி.மு.க., வெற்றி பெற வேண்டும்," என ,அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.விருதுநகரில் நடந்த உள்ளாட்சி தேர்தல் தி.மு.க., ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது: விருதுநகர் நகராட்சியில் 36 வார்டுகளிலும் தி.மு.க., வெற்றி பெற வேண்டும். போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றிக்கு அனைவரும் கடுமையாக உழைத்து கட்சி பணியாற்ற வேண்டும், என்றார்.நகர செயலாளர் தனபாலன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., சீனிவாசன், மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் சுப்பாராஜ், பொதுக்குழு உறுப்பினர் மதியழகன், இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணக்குமார், மாணவரணி அமைப்பாளர் ராஜகுரு, வர்த்தக அணி அமைப்பாளர் போஸ், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கார்த்திகேயன் பங்கேற்றனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement