dinamalar telegram
Advertisement

பாராலிம்பிக் மாரியப்பன் தம்பி போலீசில் தஞ்சம்

Share
ஓமலுார்:பாராலிம்பிக் மாரியப்பன் தம்பி காதல் திருமணம் செய்து போலீசில் தஞ்சம் அடைந்தார்.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகா, பெரியவடகம்பட்டியைச் சேர்ந்தவர் அண்ணாமலை, 43. இவர், தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் அளித்த மனு:கடந்த 27ல், என் மகள் பவித்ரா, 20, வீட்டில் இருந்து மாயமானார். விசாரித்ததில், பெரியவடகம்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் மகன் கோபி, 24; கடத்திச் சென்றது தெரிந்தது. இவர், பாராலிம்பிக் மாரியப்பனின் தம்பி. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.இந்நிலையில், கோபி - பவித்ரா திருமணம் செய்துகொண்டு, ஓமலுார் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement