கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 171 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 171 வார்டு உறுப்பினர் பதவிக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்., 19ல் நடத்தப்படும் என, தமிழக தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது. இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் இன்று (28ம் தேதி) முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும் அறிவித்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, பர்கூர், தேன்கனிக்கோட்டை, காவேரிப்பட்டணம், கெலமங்கலம், நாகோஜனஹள்ளி, ஊத்தங்கரை ஆகிய, ஆறு பேரூராட்சிகளில் உள்ள, 171 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடக்கவுள்ளது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!