கும்மனூரில் எருதுவிடும் விழா: 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், கும்மனூரில் நேற்று எருதுவிடும் விழா நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளான தாசரிப்பள்ளி, கொண்டேப்பள்ளி, ஜூனூர், குந்தாரப்பள்ளி, மாதேப்பட்டி, செம்மடமுத்தூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட, 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இப்போட்டிகளில் குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நேரத்தில், விரைந்து கடந்த முதல், 50 காளைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. தமிழக அரசு தற்போது விதித்துள்ள கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் மற்றும் எருதுவிடும் போட்டிகளுக்கான வழிகாட்டுதல்களும், அரசு கட்டுப்பாடுகளும் உரிய முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என ஆர்.டி.ஓ., சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். விழா ஏற்பாடுகளை திப்பனப்பள்ளி பஞ்., தலைவர் கிருஷ்ணவேணி கிருஷ்ணன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!