dinamalar telegram
Advertisement

இரவில் பறந்த தேசியக்கொடி: பஞ்., நிர்வாகம் அலட்சியம்

Share
போச்சம்பள்ளி: காவேரிப்பட்டிணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, கோட்டப்பட்டி பஞ்., அலுவலகத்தில், நேற்று முன்தினம், 73வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. அப்போது ஏற்றப்பட்ட தேசிய கொடியை, அன்று மாலை இறக்காமல் அப்படியே விட்டுச் சென்றுள்ளனர். நேற்று காலை, 7:00 மணியளவில் அந்த வழியாக சென்றவர்கள், அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கோட்டப்பட்டி பஞ்., தலைவர் கீதா கோவிந்தசாமியை, மொபைல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவரது கணவர் கோவிந்தசாமி பேசினார். அப்போது அவர், ''மாலையில் தேசியக்கொடியை இறக்கி விட வேண்டும் என எனக்கு தெரியாது,'' என்றார். பஞ்., செயலாளர் சர்தாரிடம் கேட்டதற்கு, நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு கிருஷ்ணகிரியிலுள்ள தன் வீட்டிற்கு சென்றதாகவும், தூய்மை பணியாளரிடம் தேசியக்கொடியை இறக்கி விட கூறிவிட்டு சென்றதாகவும், தூய்மை பணியாளர் கொடியை கவனிக்காமல் விட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement