dinamalar telegram
Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்

Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும், பிப்.,19ல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ளது. எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களாகிய கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களை தேர்தல் பிரசாரத்திற்கான இடங்களாக பயன்படுத்தக் கூடாது. லஞ்சமோ அல்லது வெகுமதியோ வாக்காளர்களுக்கு கொடுத்தல் கூடாது. உரிய அலுவலரிடம் அனுமதி பெறாமல் எந்த கட்சி வேட்பாளரும் ஒலிபெருக்கியை பயன்படுத்தக் கூடாது. குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கூட்டங்கள் மற்றும் பேரணிகள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று நடத்த வேண்டும். கொரோனா தடுப்பு நடைமுறை விதிகளின்படி, அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரங்களை சமூக வலைத்தளங்கள், கைபேசி வாயிலாக மேற்கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகளை, கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement