dinamalar telegram
Advertisement

சிறுதானியம் குறித்து வாகன பிரசாரம்

Share
திருப்பரங்குன்றம் : சிறுதானிய பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் வேளாண் துறை சார்பில் பிரசார வாகனம் துவக்கி வைக்கப்பட்டது.

இத்துறை திட்டங்கள் குறித்த அலங்கரிக்கப்பட்ட பிரசார வாகனத்தை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் வேட்டையன், அட்மா திட்ட தலைவர் பெரியசாமி துவக்கி வைத்தனர். துணைத்தலைவர் இந்திரா முன்னிலை வகித்தார். வேளாண் அலுவலர் வரதராஜன் வரவேற்றார்.சிறு தானியங்கள் சாகுபடி முக்கியத்துவம், பயன்கள், மானிய திட்டங்கள் குறித்து திருப்பரங்குன்றம் வேளாண் உதவி இயக்குனர் மீனாட்சிசுந்தரம் எடுத்துரைத்தார்.


கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி வேளாண் கண்காட்சியை துவக்கி வைத்து பேசினார். உதவி வேளாண் அலுவலர்கள் டேவிட், மனோகர், செல்வகுமார், கருப்பசாமி, சேகர், சவுந்தர், மருது ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.மேலுார் வேளாண்இணை இயக்குனர் விவேகானந்தன் துவக்கி வைத்தார்.துணை இயக்குனர்கள் லட்சுமி பிரபா, தனலட்சுமி, வேளாண் உதவி இயக்குனர் செல்வி, அட்மா திட்ட தலைவர் குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement