dinamalar telegram
Advertisement

நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

Share
நரிக்குடி : நரிக்குடி பகுதியில் பல்வேறு ஊர்களில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்க மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இதனை நம்பி விவசாயிகள் ஆங்காங்கே நெல்களை திறந்த வெளியில் குவித்து வைத்தனர்.

அரசு கொள்முதல் நிலையம் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. வெயிலில் காய்ந்த நெல், பணியில் பதப்பட்டு பாதிப்பதால், நல்ல விளைச்சல் கண்டும் பயனில்லாமல் போனதே என விவசாயிகள் கவலை தெரிவித்தனர். இதுதொடர்பான செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று நரிக்குடி, நாலுார் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டது. மகிழ்ச்சியடைந்து விவசாயிகள், செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement