மத்திய அரசின் இ--ஷ்ராமில் 1 லட்சத்து 92 ஆயிரம் பேர் பதிவு
விருதுநகர் : மத்திய அரசின் இ--ஷ்ராமில் 1 லட்சத்து 92 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளதாக தொழிலாளர் நலத்துறை சமுக பாதுகாப்பு திட்டம் உதவி ஆணையர் ஜே.காளிதாஸ் கூறினார்.
தொழிலாளர் நலத்துறையில் சமுக பாதுகாப்பு திட்டத்தின் நோக்கம்அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வருங்காலம் குறித்த சமுக பாதுகாப்பை உருவாக்குவதுதான் நோக்கம். இ.எஸ்.ஐ, பிஎப்., இல்லாத தொழிலாளர்கள் தமிழக அரசின் 18 தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்து பல்வேறு திட்டங்களில் பயன்பெறலாம். தொழிலாளர் நலவாரியம் நோக்கம், உறுப்பினர்களின் எண்ணிகைஅமைப்பு சாரா தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குப்படுத்துதல், அவர்களுக்கு சமுக பாதுகாப்பு அளித்தல் தமிழ்நாடு அமைப்பு சாரா நல வாரியங்களின் நோக்கமாகும். விருதுநகர் மாவட்டத்தில் 18 நலவாரியங்களில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 936 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
கொரோனா ஊரடங்கு காலங்களில் தொழிலாளர்களுக்கு அரசு உதவிகள் கட்டுமான தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்களுக்கு அரசு ரூ.2 ஆயிரம் வங்கியில் நேரடியாக செலுத்தியது. அரிசி, எண்ணெய், பருப்பு வகைகள் வழங்கப்பட்டன.ஆன்லைன் உபயோகத்தால் இடைத்தரகர்கள் குறைந்தாலும் சர்வர் கோளாறுகள் தொடர்கிறதேஆன்லைன் முறையால் தொழிலாளர்கள் வீட்டில் இருந்தபடியோ, பொது சேவை மையம் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். இடைதரகர்கள் தொல்லை இல்லை. தொழிற்சங்க சான்று வாங்க வேண்டும்.
சம்மந்தப்பட்ட வி.ஏ.ஓ., வேலை பார்க்கும் உரிமையாளரிடம் இருந்து கூட சான்று வாங்கி பதிவு செய்யலாம். சர்வர் கோளாறு இல்லை. அதிகரித்து வரும் ஆன்லைன் நடைமுறையால் சர்வர் கேபாசிட்டி அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இ--ஷ்ராமில் எத்தனை பேர் பதிவு செய்துள்ளனர்.விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் இ--ஷ்ராமில் 1 லட்சத்து 92 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். தமிழக அளவில் 10வது மாவட்டமாக உள்ளோம். அமைப்பு சாரா தொழிலாளர்கள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.இ--ஷ்ராம் பதிவின் மூலம் தொழிலாளர் பெறும் பயன்உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசின் தொழிலாளர் துறை இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. மத்திய அரசின் பீமா சுரக்ஷா யோஜனா காப்பீட்டு திட்டத்தில் ஓராண்டுக்கான சந்தா செலுத்த அரசால் செலுத்தப்படுகிறது. இக்காப்பீடு மூலம் விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். வருங்காலங்களில் இ--ஷ்ராம் பதிவை அடிப்படையாக கொண்டு சலுகைகள், திட்டங்கள் அறிவிக்கப்படும்.
தொழிலாளர்கள் முகாம்கள் நடத்தப்படுகிறதாஇ--ஷ்ராம் பதிவதற்கு எல்லா இடங்களிலும் முகாம்கள் நடத்தப்படுகிறது எங்கெல்லாம் கேட்கிறார்களோ அங்கெல்லாம் முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது. முகாம்கள் தேவைப்பட்டால் உடனடியாக அமைத்து தரப்படும். இம்முகாம்களில் புகார்கள் இருந்தால் தெரிவிக்கலாம். பொது சேவை மையங்களில் இலவசமாக பதிவு செய்யப்படுகிறது.மாநில அரசால் வழங்கப்படும் திட்டங்கள்முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதல் படி கட்டுமான தொழிலாளர்களின் 6 வகுப்பு முதல் 9 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.ஆயிரம் உதவித்தொகை, 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு ரூ.1500, டிகிரி படிப்பதற்கு ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் உதவி தொகைகள் வழங்கப்படுகிறது. தொழிலாளர்களின் இறுதி சடங்கிற்காக ரூ.5 ஆயிரமாக வழங்கப்படுகிறது பணியிட விபத்து மரணத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு நிவாரண தொகையாக ரூ.5 லட்சம், ஆட்டோ டிரைவர்களுக்கு நிவாரண தொகையாக ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது. உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு இயற்கை மரணத்திற்கு ரூ.35 ஆயிரமாம், விபத்து மரணத்திற்கு ரூ.1 லட்சத்து 35 ஆயிரமாக நிவாரண தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், கண் கண்ணாடி கொடுக்கப்படுகிறது.பெரும்பான்மை தொழிலாளர்கள் படிக்காதவர்களே. ஆன்லைன் விண்ணப்பித்தல் குறித்து என்னென்ன விழிப்புணர்வு அளிக்கப்படுகிறதுதொழிலாளர்களுக்கு போதிய விழிப்புணர்வு உள்ளது. பொது சேவை மையங்கள் எல்லா இடங்களிலும் உள்ளது. படிக்காதவர்கள் சிரமப்படுவது துவக்கத்தில் இருந்திருக்கலாம். தற்போது இல்லை.இருப்பினும் நுாறு சதவீத இ--ஷ்ராம் பதிவை உறுதி செய்யவும், மாநில அரசின் திட்டங்களில் தொழிலாளர்கள் பயன்பெறவும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்,என்றார்.
தொழிலாளர் நலத்துறையில் சமுக பாதுகாப்பு திட்டத்தின் நோக்கம்அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வருங்காலம் குறித்த சமுக பாதுகாப்பை உருவாக்குவதுதான் நோக்கம். இ.எஸ்.ஐ, பிஎப்., இல்லாத தொழிலாளர்கள் தமிழக அரசின் 18 தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்து பல்வேறு திட்டங்களில் பயன்பெறலாம். தொழிலாளர் நலவாரியம் நோக்கம், உறுப்பினர்களின் எண்ணிகைஅமைப்பு சாரா தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குப்படுத்துதல், அவர்களுக்கு சமுக பாதுகாப்பு அளித்தல் தமிழ்நாடு அமைப்பு சாரா நல வாரியங்களின் நோக்கமாகும். விருதுநகர் மாவட்டத்தில் 18 நலவாரியங்களில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 936 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
சம்மந்தப்பட்ட வி.ஏ.ஓ., வேலை பார்க்கும் உரிமையாளரிடம் இருந்து கூட சான்று வாங்கி பதிவு செய்யலாம். சர்வர் கோளாறு இல்லை. அதிகரித்து வரும் ஆன்லைன் நடைமுறையால் சர்வர் கேபாசிட்டி அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இ--ஷ்ராமில் எத்தனை பேர் பதிவு செய்துள்ளனர்.விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் இ--ஷ்ராமில் 1 லட்சத்து 92 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். தமிழக அளவில் 10வது மாவட்டமாக உள்ளோம். அமைப்பு சாரா தொழிலாளர்கள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.இ--ஷ்ராம் பதிவின் மூலம் தொழிலாளர் பெறும் பயன்உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசின் தொழிலாளர் துறை இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. மத்திய அரசின் பீமா சுரக்ஷா யோஜனா காப்பீட்டு திட்டத்தில் ஓராண்டுக்கான சந்தா செலுத்த அரசால் செலுத்தப்படுகிறது. இக்காப்பீடு மூலம் விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். வருங்காலங்களில் இ--ஷ்ராம் பதிவை அடிப்படையாக கொண்டு சலுகைகள், திட்டங்கள் அறிவிக்கப்படும்.
தொழிலாளர்கள் முகாம்கள் நடத்தப்படுகிறதாஇ--ஷ்ராம் பதிவதற்கு எல்லா இடங்களிலும் முகாம்கள் நடத்தப்படுகிறது எங்கெல்லாம் கேட்கிறார்களோ அங்கெல்லாம் முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது. முகாம்கள் தேவைப்பட்டால் உடனடியாக அமைத்து தரப்படும். இம்முகாம்களில் புகார்கள் இருந்தால் தெரிவிக்கலாம். பொது சேவை மையங்களில் இலவசமாக பதிவு செய்யப்படுகிறது.மாநில அரசால் வழங்கப்படும் திட்டங்கள்முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதல் படி கட்டுமான தொழிலாளர்களின் 6 வகுப்பு முதல் 9 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.ஆயிரம் உதவித்தொகை, 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு ரூ.1500, டிகிரி படிப்பதற்கு ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் உதவி தொகைகள் வழங்கப்படுகிறது. தொழிலாளர்களின் இறுதி சடங்கிற்காக ரூ.5 ஆயிரமாக வழங்கப்படுகிறது பணியிட விபத்து மரணத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு நிவாரண தொகையாக ரூ.5 லட்சம், ஆட்டோ டிரைவர்களுக்கு நிவாரண தொகையாக ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது. உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு இயற்கை மரணத்திற்கு ரூ.35 ஆயிரமாம், விபத்து மரணத்திற்கு ரூ.1 லட்சத்து 35 ஆயிரமாக நிவாரண தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், கண் கண்ணாடி கொடுக்கப்படுகிறது.பெரும்பான்மை தொழிலாளர்கள் படிக்காதவர்களே. ஆன்லைன் விண்ணப்பித்தல் குறித்து என்னென்ன விழிப்புணர்வு அளிக்கப்படுகிறதுதொழிலாளர்களுக்கு போதிய விழிப்புணர்வு உள்ளது. பொது சேவை மையங்கள் எல்லா இடங்களிலும் உள்ளது. படிக்காதவர்கள் சிரமப்படுவது துவக்கத்தில் இருந்திருக்கலாம். தற்போது இல்லை.இருப்பினும் நுாறு சதவீத இ--ஷ்ராம் பதிவை உறுதி செய்யவும், மாநில அரசின் திட்டங்களில் தொழிலாளர்கள் பயன்பெறவும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்,என்றார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!