புதியவர்களுக்கு சீட் தி.மு.க.,வினர் குஷி
விருதுநகர் : புதியவர்களுக்கு வழிவிடும் வகையில் விருதுநகர் நகராட்சிக்கான தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல் தயாராகி உள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.
இன்று முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்க உள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் களப்பணிகளில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். விருதுநகர் நகராட்சியில் தி.மு.க., சார்பில் 25 வார்டுகளில் வேட்பாளர்கள் களமிறங்க உள்ளனர். இதில் 20 பேர் வரை புதுமுகங்களாக இருக்கும் என கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூறினர்.
பெரும்பாலும் 30 முதல் 40 வயதுடையவர்களே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி மாவட்ட செயலாளர்கள் அறிவுறுத்தல்படி வேட்பாளர் தேர்வு நடந்துள்ளதாக கூறுகின்றனர். இருப்பினும் கூட்டணிக்கட்சியினரான காங், கம்யூனிஸ்ட், கூடுதல் சீட் கேட்டு வருகின்றன.
இன்று முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்க உள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் களப்பணிகளில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். விருதுநகர் நகராட்சியில் தி.மு.க., சார்பில் 25 வார்டுகளில் வேட்பாளர்கள் களமிறங்க உள்ளனர். இதில் 20 பேர் வரை புதுமுகங்களாக இருக்கும் என கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூறினர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!