dinamalar telegram
Advertisement

புதிய கல் குவாரி துவக்க மக்களிடம் கருத்துக்கேட்பு

Share
வாலாஜாபாத்,-புதிதாக கல் குவாரி துவக்க, பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.உத்திரமேரூர் ஒன்றியம், சிறுதாமூரில் புதிதாக கல்குவாரி துவக்க, மாவட்ட நிர்வகம் முடிவு செய்துள்ளது. இது சம்பந்தமான கருத்துக்கேட்பு கூட்டம், வாலாஜாபாதில் நேற்று நடந்தது.காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி தலைமையில், காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ., ராஜலட்சுமி, கல் குவாரி உரிமையாளர்கள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.இதில், புதிதாக கல் குவாரி துவக்கினால் குடிநீர், காற்று மாசடையும்; கால்நடை மேய்ச்சல் நிலம் குறையும் என கூறினர்.குவாரி உரிமையாளர்கள், 'குவாரியில் 100க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். நான்கு மாதங்களாக தொழில் முடங்கியுள்ளது. அதில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது' என்றனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement