dinamalar telegram
Advertisement

மாமல்லை அலங்கோலத்திற்கு விடிவு

Share
மாமல்லபுரம்-மாமல்லபுரத்தில் அரசியல் கட்சிகளின் கொடி கம்பம், சுவர் விளம்பரம், சுவரொட்டி, தேர்தலுக்காக அகற்றி, தற்காலிக விமோசனம் ஏற்பட்டுள்ளது.பாரம்பரிய சுற்றுலா இடமாக உள்ள மாமல்லபுரத்தை, அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அக்கறையின்றி அலட்சியப்படுத்துகின்றனர்.அலட்சியம்பொது இடத்தில் பதாகை அமைத்து, சுவர் விளம்பரம் எழுதி, சுவரொட்டி ஒட்டி, கொடிகம்பம் நட்டு அலங்கோலப்படுத்துகின்றனர். அரசு கட்டடத்தையும் விட்டு வைப்பதில்லை.இத்தகைய அலங்கோலத்தால், பயணியர் அருவருத்து முகம் சுளிக்கின்றனர்.அரசு நிர்வாகங்களும் நடவடிக்கை இன்றி அலட்சியப்படுத்துகின்றன.தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவித்து, தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து, பேரூராட்சி நிர்வாகத்தினர், செயல் அலுவலர் கணேஷ் மேற்பார்வையில், பதாகை, கொடிக்கம்பங்கள், சுவரொட்டி அகற்றி, சுவர் விளம்பரங்களை அழித்தனர்.பேரூராட்சிகள் உதவி இயக்குனர் வில்லியம் யேசுதாஸ், இதுகுறித்து ஆய்வு செய்து, அனைத்தையும் அழிக்க அறிவுறுத்தினார். இந்நடவடிக்கையால், தற்காலிக விமோசனம் ஏற்பட்டு உள்ளது.ஈடுபாடுதிருக்கழுக்குன்றத்திலும், சுகாதார ஆய்வாளர் ஸ்ரீதரன் மேற்பார்வையில், இவை அகற்றப்பட்டன.செங்கல்பட்டு நகராட்சியில், 33 வார்டுகளில், அரசியல் கட்சி கொடிகள், சுவர் விளம்பரங்கள் அகற்றும் பணியில், நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.இதேபோன்று, நகரில் ஜி.எஸ்.டி., சாலையில், அரசு மற்றும் தனியார் சுவர்களில், தி.மு.க., அ.தி.மு.க., வினர், எழுதி உள்ள, விளம்பரங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement