dinamalar telegram
Advertisement

இருக்கை இல்லாத நிழற்குடையில் பயணியருக்காக டீக்கடை பெஞ்ச்

Share
காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கேட் பஸ் நிறுத்தத்தில், பயணியரின் வசதிக்காக, 10 ஆண்டுகளுக்கு முன், இருக்கை வசதி இல்லாமல் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது.பஸ்சுக்காக காத்திருக்கும் பயணியர், நின்றபடியே காத்திருக்க வேண்டியுள்ளது. முதியோர், கால் வலி, உடல்நலம் குன்றியவர்கள நிற்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.இதை பார்த்த பஸ் நிறுத்தம் அருகில் உள்ள டீ கடைக்காரர் ஒருவர், தன் கடைக்கு வரும் வாடிக்கையாளர் அமர்வதற்காக பயன்படுத்தும் பெஞ்சை, பயணியர் நிழற்குடையில் போட்டு, உதவி செய்துள்ளார்.பஸ் ஏற வரும் முதியோர், பெஞ்சை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, பயணியர் நிழற்குடை மழை நீர் கசியும் அளவிற்கு சிதிலமடைந்துள்ளதால், இடித்து அகற்றி, புதிய நிழற்குடை கட்டி இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement