பூண்டியில் ஆளுங்கட்சியினர் தலையீடு ஆர்ப்பாட்டம் நடத்த அ.தி.மு.க., முடிவு
திருவள்ளூர்-பூண்டி ஒன்றியத்தில், அனைத்து பணிகளிலும், ஆளுங்கட்சியினர் தலையீடு நடப்பதைக் கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, முன்னாள் அமைச்சர் ரமணா தெரிவித்தார்.திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸிடம், அ.தி.மு.க., மேற்கு மாவட்டச் செயலர் ரமணா, வடக்கு மாவட்ட செயலர் பலராமன், பூண்டி ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணா மற்றும் நிர்வாகிகள், நேற்று காலை, சந்தித்தனர்.அப்போது, பூண்டி ஒன்றியத்தில், தி.மு.க., துணை தலைவரின் கணவர் குறுக்கீடு செய்வதாக கூறி, புகார் மனு அளித்தார்.பின், செய்தியாளர்களிடம், ரமணா கூறுகையில், 'பூண்டி ஒன்றியத்தில், சேதமடைந்த கட்டடங்கள் அனுமதியின்றி, தி.மு.க.,வினர் இடித்து வருகின்றனர். அதே சமயம், கவுன்சிலர்கள், அ.தி.மு.க., ஒப்பந்ததாரர்கள் பணியை கேட்டால், தடுக்கின்றனர். இதற்கு, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளோம்.நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும், திங்கட்கிழமை, பூண்டி ஒன்றிய அலுவலகம் முன், அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்' என்றார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!