dinamalar telegram
Advertisement

 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள்...  விறுவிறுப்பு! 318 பிரதிநிதிகள் தேர்வு செய்ய மக்கள் ஆர்வம்

Share
திருவள்ளூர்-திருவள்ளூர் மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான பணியில், மாவட்ட நிர்வாகம் விறுவிறுப்பாக ஈடுபட்டு உள்ளது.

மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை தேர்வு செய்யும், 318 மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்ய, வாக்காளர்கள் ஆர்வமாக உள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் மூலம், ஒன்றிய, ஊராட்சி பிரதிநிதிகள், தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஒரு ஆண்டுக்கும் மேலாகிறது. நகர்ப்புற தேர்தல், நடைபெறாமல் இருந்தது.

இந்த நிலையில், நகர்ப்புற தேர்தல் அறிவிக்கையினை, மாநில தேர்தல் ஆணையம், நேற்று முன்தினம் அறிவித்தது.இதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில், ஆவடி மாநகராட்சி, திருவள்ளூர், திருத்தணி, திருவேற்காடு, பூந்தமல்லி, திருநின்றவூர், பொன்னேரி என, ஆறு நகராட்சி மற்றும், ஊத்துக்கோட்டை.ஆரணி, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், நாரவாரிகுப்பம், திருமழிசை, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை என, எட்டு பேரூராட்சிகளில் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.7.45 லட்சம் வாக்காளர்கள்ஆவடி மாநகராட்சி, திருவள்ளூர், திருத்தணி, திருவேற்காடு, பூந்தமல்லி, திருநின்றவூர், பொன்னேரி நகராட்சிகள், திருமழிசை, ஊத்துக்கோட்டை, ஆரணி. கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், நாரவாரிக்குப்பம், பள்ளிப்பட்டு மற்றும் பொதட்டூர்பேட்டை என, எட்டு பேரூராட்சிகளில், மொத்தம், 3 லட்சத்து, 67 ஆயிரத்து, 170 ஆண் வாக்காளர்களும்; 3 லட்சத்து, 78 ஆயிரத்து, 313 பெண் வாக்காளர்களும்; 158 திருநங்கையர் என, மொத்தம், 7 லட்சத்து, 45 ஆயிரத்து, 634 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள், மொத்தம், 318 வார்டுகளில், 830 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டு அளிக்க, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.இன்று மனு தாக்கல்இதன்படி, வேட்பு மனு தாக்கல், இன்று துவங்கி, வரும், பிப்.4ம் தேதி வரை நடைபெற உள்ளது. வேட்பு மனு பரிசீலனை, பிப்., 5ம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெற, பிப்., 7ம் தேதி கடைசி நாள். அன்று மாலை, போட்டியிடுவோர் பட்டியல் வெளியிடப்படும்.பதவி ஏற்பு நாள்ஓட்டுப்பதிவு, பிப்.19ம் தேதி நடைபெறும். பதிவான ஓட்டுக்கள், பிப்., 22ம் தேதி எண்ணப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவி ஏற்பு நாள், மார்ச் 2ம் தேதி நடைபெற உள்ளது.அதன் பின், மறைமுக தேர்தல் மூலம் மாநகராட்சி மேயர், துணை மேயர்; நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல், மார்ச் 4ம் தேதி நடைபெறும்.இதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் செயல்படுத்தி வருவதாக, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்து உள்ளார்.

நகர்ப்புற தேர்தல் வாக்காளர் விபரம்நகர்ப்புற அமைப்ப ஆண் பெண் திருநங்கை மொத்தம்ஆவடி மாநகராட்சி 1,54,633 1,57,334 73 3,12,033திருவள்ளூர் நகராட்சி 25,028 26,425 6 51,459திருத்தணி நகராட்சி 18,070 19,393 8 37,471திருவேற்காடு நகராட்சி 40,669 40,720 24 81,413பூந்தமல்லி நகராட்சி 29,933 30,802 9 60,744பொன்னேரி நகராட்சி 13,564 14,171 18 27,753திருநின்றவூர் நகராட்சி 20,333 21,177 8 41,518ஊத்துக்கோட்டை பேரூராட்சி 5,003 5,459 1 10,463ஆரணி பேரூராட்சி 5,426 5,788 0 11,214கும்மிடிப்பூண்டி பேரூராட்சி 8,925 8,688 3 17,616மீஞ்சூர் பேரூராட்சி 13,065 13,707 2 26,774நாரவாரிக்குப்பம் பேரூராட்சி 10,785 11,477 2 22,264திருமழிசை பேரூராட்சி 8,515 9,127 3 17,645பள்ளிப்பட்டு பேரூராட்சி 3,850 4,178 1 8,029பொதட்டூர்பேட்டை பேரூராட்சி 9,371 9,867 0 19,238மொத்தம் 3,67,170 3,78,313 158 7,45,634நகர்ப்புற அமைப்பு மொத்த வார்டு ஓட்டுச்சாவடிஆவடி மாநகராட்சி 48 350திருவள்ளூர் நகராட்சி 27 51திருத்தணி நகராட்சி 21 42திருவேற்காடு நகராட்சி 18 77பூந்தமல்லி நகராட்சி 21 63பொன்னேரி நகராட்சி 27 37திருநின்றவூர் நகராட்சி 27 48ஊத்துக்கோட்டை பேரூராட்சி 15 15ஆரணி பேரூராட்சி 15 15கும்மிடிப்பூண்டி பேரூராட்சி 15 22மீஞ்சூர் பேரூராட்சி 18 28நாரவாரிக்குப்பம் பேரூராட்சி 18 25திருமழிசை பேரூராட்சி 15 19பள்ளிப்பட்டு பேரூராட்சி 15 15பொதட்டூர்பேட்டை பேரூராட்சி 18 23மொத்தம் 318 830
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement