dinamalar telegram
Advertisement

போக்குவரத்திற்கு லாயக்கற்ற கிழக்கு கடற்கரை சாலை

Share
பழவேற்காடு--கிழக்கு கடற்கரை சாலை முழுதும் சரளை கற்கள் பெயர்ந்தும், குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.பழவேற்காடு லைட்அவுஸ்குப்பம் மீனவ கிராமத்தில் இருந்து, அரங்கம், வைரவன்குப்பம், கோரைகுப்பம் வழியாக, காட்டுப்பள்ளி வரை கிழக்கு கடற்கரை சாலை உள்ளது.காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள துறைமுகங்கள், அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையங்கள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் மீனவ கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்கள், கிழக்கு கடற்கரை சாலை வழியாக பயணித்து வருகின்றனர்.பழவேற்காடு மீனவ கிராமங்களை சேர்ந்த மக்கள் பல்வேறு தேவைகளுக்காக சென்னை செல்வதற்கும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.பஸ் போக்குவரத்து இல்லாத நிலையில், இருசக்கர வாகனங்களிலேயே சென்று வருகின்றனர். மேற்கண்ட சாலை முழுதும் சரளை கற்கள் பெயர்ந்தும், குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.இரவு நேர பயணங்களின்போது தடுமாற்றம் அடைந்து சிறு சிறு விபத்துக்களிலும் சிக்கி தவிக்கின்றனர்.பழவேற்காடு முதல், காட்டுப்பள்ளி வரை சாலையை விரிவுப்படுத்தி, புதுப்பிக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement