முன்கள பணியாளரின் மகன் மருத்துவ சீட் கேட்டு வழக்கு
மதுரை:முன்கள பணியாளரின் மகன் ஒருவர், மருத்துவ படிப்பில் 'சீட்' கேட்டு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துாரைச் சேர்ந்த அரவிந்த் தாக்கல் செய்த மனு:'நீட்' தேர்வில் 720க்கு 463 மதிப்பெண் பெற்றேன். என் தந்தை பாலசுப்பிரமணியன் 108 ஆம்புலன்ஸ் டிரைவர். கொரோனா காலத்தில், முன்கள பணியாளராக பங்களிப்பு செய்துள்ளார். முன்கள பணியாளர்களின் குழந்தைகளுக்கு, மருத்துவ படிப்பில் இடம் ஒதுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், இடம் ஒதுக்கக் கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். அரசு மருத்துவ கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், தேர்வுக் குழுவின் மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனரை எதிர்மனுதாரராக சேர்த்து, வழக்கை பிப்., 1க்கு தள்ளி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துாரைச் சேர்ந்த அரவிந்த் தாக்கல் செய்த மனு:'நீட்' தேர்வில் 720க்கு 463 மதிப்பெண் பெற்றேன். என் தந்தை பாலசுப்பிரமணியன் 108 ஆம்புலன்ஸ் டிரைவர். கொரோனா காலத்தில், முன்கள பணியாளராக பங்களிப்பு செய்துள்ளார். முன்கள பணியாளர்களின் குழந்தைகளுக்கு, மருத்துவ படிப்பில் இடம் ஒதுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!