மதுரை : மதுரையில் பொது மாறுதல் கலந்தாய்வில் உரிய பணியிடம் ஒதுக்காததை கண்டித்து ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓ.சி.பி.எம்., பள்ளியில் ஜன.,24 முதல் கலந்தாய்வு நடக்கிறது. நேற்று நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடந்தது. இதில் 2019 ல் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு செய்வதில் பிரச்னை ஏற்பட்டது. இதை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர்கள் கூறியதாவது:ஜாக்டோ ஜியோ சார்பில் 2019ம் ஆண்டு ஜன.22 - 30 வரை போராட்டம் நடந்தது. ஜன.,29க்குள் பணியில் சேர கெடு விதித்ததால் பணிக்கு திரும்பினோம். பலர் இடமாற்றப்பட்டனர். ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை சமீபத்தில் அரசு திரும்ப பெற்றது.
'இதனால் 2019 போராட்டத்தின் போது நாங்கள் இழந்த அதே இடத்தை கலந்தாய்வில் வழங்க வேண்டும்' என வலியுறுத்தினோம். அதிகாரிகள் மறுத்ததால் போராட்டம் நடத்தப்பட்டது, என்றனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் மீண்டும் கலந்தாய்வு துவங்கியது.
ஓ.சி.பி.எம்., பள்ளியில் ஜன.,24 முதல் கலந்தாய்வு நடக்கிறது. நேற்று நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடந்தது. இதில் 2019 ல் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு செய்வதில் பிரச்னை ஏற்பட்டது. இதை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'இதனால் 2019 போராட்டத்தின் போது நாங்கள் இழந்த அதே இடத்தை கலந்தாய்வில் வழங்க வேண்டும்' என வலியுறுத்தினோம். அதிகாரிகள் மறுத்ததால் போராட்டம் நடத்தப்பட்டது, என்றனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் மீண்டும் கலந்தாய்வு துவங்கியது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!