கால்பந்தாட்டத்தில் சாதிக்கும் கிராம மாணவர்கள் : போதிய வசதி இல்லாமல் தினம் தினம் சிரமம்
திருச்சுழி : கால்பந்தாட்டத்தில் சாதிக்கும் குலசேகர நல்லுாார் கிராம மாணவர்கள் போதிய மைதானம்,உபகரணங்கள் இல்லாமல் சிரமத்தை சந்திக்கின்றனர்.இவர்களுக்கு போதி வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க உளாட்சி நிரவ்ாகம் முன் வர வேண்டும்.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது குலசேகர நல்லுார் ஊராட்சி. இங்குள்ள நுாற்றுக்கு மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவர்கள் உள்ளூர், வெளியூர்களில் படிக்கின்றனர். ஊரில் அரசு உயர்நிலை பள்ளி இருந்தாலும் மேற் படிப்பிற்கு திருச்சுழி, அருப்புக்கோட்டை செல்ல வேண்டும்.ஊரில் உள்ளோர் தலைமுறை தலைமுறையாக கால் பந்தாட்டம் விளையாடுகின்றனர்.
இங்குள்ள மாணவர்கள் அனைவரும் கால்பந்தாட்டத்தில் திறமை பெற்றவர்கள். ஒரு டீம் அமைத்து பல மாவட்டங்களில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை அள்ளுகின்றனர்.ஊரில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் தான் பயிற்சி எடுக்கின்றனர். இதற்கு போதுமான அளவு மைதான வசதி இல்லை. கால்பந்து தேவையான கிட் இல்லை. பந்துகளை சொந்த காசில் வாங்கி விளையாடுகின்றனர்.
பெற்றோர்கள் தொழிலாளர்களாக இருப்பதால் மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. கிளவுஸ், ஷூக்கள் என எதுவும் இல்லாமல் இருப்பதை வைத்து சமாளிக்கின்றனர்.பந்துகளை அடிக்கடி பஞ்சர் பார்த்து தான் பயிற்சி எடுக்க வேண்டியுள்ளது. கால் பந்தாட்டத்தில் சாதிக்க துடிக்கும் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் இல்லாததால் கால்பந்தாட்டத்தில் சாதிப்பது வெறும் கனவாக போய் விடுமோ என்ற ஏக்கத்தில் கிராமத்து மாணவர்கள் உள்ளனர். இதை கருதி இவர்களுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்க ஊராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும். ..............
3 தலைமுறையாக விளையாடுகிறோம்
கமலேஷ், சட்டக் கல்லுாரி மாணவர் : எங்கள் ஊர் மாணவர்கள் மூன்று தலைமுறையாக கால்பந்தாட்டம் விளையாடி வருகிறோம். பயிற்சி எடுப்பதற்கான மைதானம் சரியாக இல்லை. கால்பந்தாட்டதிற்கான உபகரணங்களும் இல்லை. நாங்கள் சொந்த காசு கொடுத்து பந்துகள், கையுறைகள் வாங்குகிறோம். எங்களுக்கு முக்கியமாக மைதான வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்........... மைதானம் வேண்டும்அதி வீர பிரதாப், பள்ளி மாணவர் : நான் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறேன். ஊரில் உள்ள பள்ளியில் இருக்கும் மைதானத்தில் தான் கால்பந்தாட்ட பயிற்சி எடுக்கிறோம். மைதானம் போதுமான வசதி இல்லை. விளையாடுவதற்கு தேவையான உபகரணங்களும் இல்லை. இருப்பதை வைத்து நாங்கள் பயிற்சி எடுக்கிறோம். வட்ட, மாவட்ட, தேசிய அளவில், பரிசுகளை அள்ளி உள்ளோம். எங்களுக்கு மைதானம் தேவை.......................* நடவடிக்கை எடுக்கப்படும்வாசுகி, பி.டி.ஓ.. திருச்சுழி ஒன்றியம் : மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, மைதானத்திற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்,என்றார். ---- -
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது குலசேகர நல்லுார் ஊராட்சி. இங்குள்ள நுாற்றுக்கு மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவர்கள் உள்ளூர், வெளியூர்களில் படிக்கின்றனர். ஊரில் அரசு உயர்நிலை பள்ளி இருந்தாலும் மேற் படிப்பிற்கு திருச்சுழி, அருப்புக்கோட்டை செல்ல வேண்டும்.ஊரில் உள்ளோர் தலைமுறை தலைமுறையாக கால் பந்தாட்டம் விளையாடுகின்றனர்.
பெற்றோர்கள் தொழிலாளர்களாக இருப்பதால் மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. கிளவுஸ், ஷூக்கள் என எதுவும் இல்லாமல் இருப்பதை வைத்து சமாளிக்கின்றனர்.பந்துகளை அடிக்கடி பஞ்சர் பார்த்து தான் பயிற்சி எடுக்க வேண்டியுள்ளது. கால் பந்தாட்டத்தில் சாதிக்க துடிக்கும் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் இல்லாததால் கால்பந்தாட்டத்தில் சாதிப்பது வெறும் கனவாக போய் விடுமோ என்ற ஏக்கத்தில் கிராமத்து மாணவர்கள் உள்ளனர். இதை கருதி இவர்களுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்க ஊராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும். ..............
3 தலைமுறையாக விளையாடுகிறோம்
கமலேஷ், சட்டக் கல்லுாரி மாணவர் : எங்கள் ஊர் மாணவர்கள் மூன்று தலைமுறையாக கால்பந்தாட்டம் விளையாடி வருகிறோம். பயிற்சி எடுப்பதற்கான மைதானம் சரியாக இல்லை. கால்பந்தாட்டதிற்கான உபகரணங்களும் இல்லை. நாங்கள் சொந்த காசு கொடுத்து பந்துகள், கையுறைகள் வாங்குகிறோம். எங்களுக்கு முக்கியமாக மைதான வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்........... மைதானம் வேண்டும்அதி வீர பிரதாப், பள்ளி மாணவர் : நான் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறேன். ஊரில் உள்ள பள்ளியில் இருக்கும் மைதானத்தில் தான் கால்பந்தாட்ட பயிற்சி எடுக்கிறோம். மைதானம் போதுமான வசதி இல்லை. விளையாடுவதற்கு தேவையான உபகரணங்களும் இல்லை. இருப்பதை வைத்து நாங்கள் பயிற்சி எடுக்கிறோம். வட்ட, மாவட்ட, தேசிய அளவில், பரிசுகளை அள்ளி உள்ளோம். எங்களுக்கு மைதானம் தேவை.......................* நடவடிக்கை எடுக்கப்படும்வாசுகி, பி.டி.ஓ.. திருச்சுழி ஒன்றியம் : மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, மைதானத்திற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்,என்றார். ---- -
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!