dinamalar telegram
Advertisement

வைக்கோல் விலை குறைவால் விவசாயிகள் கவலை

Share
திருவாடானை : வைக்கோல் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.திருவாடானை தாலுகாவில் விவசாய அறுவடை பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்த ஆண்டு வைக்கோல் விலை குறைந்ததால் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இது குறித்து பாண்டுகுடி விவசாயிகள் கூறியதாவது: ஒரு ஏக்கரில் அறுவடை செய்யப்படும் வைக்கோல் கடந்தாண்டு 600 ரூபாய் வரை விலை போனது. இந்தாண்டு 400 ரூபாய்க்கு தான் போகிறது. கையால் அறுவடை செய்யும் போது நீளமான வைக்கோல் கிடைக்கும். இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் போது துண்டாகி விடுவதால் வைக்கோல் வீணாகிறது. இந்த வைக்கோலை நீண்ட நாட்களுக்கு பாதுகாக்க முடியாது என்பதால் குறைந்த விலைக்கு வியாபாரிகள் வாங்குகிறார்கள்.

ஏற்கனவே அறுவடை இயந்திரம் வாடகை உயர்வு, சாகுபடி செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் விவசாயிகளுக்கு எதிர்பார்த்த லாபம் இல்லை. இந்நிலையில் வைக்கோல் விலை குறைந்து விட்டதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement