தரிசு நிலங்களில் பயிரிட அறிவுரை
திருவாடானை : தரிசு நிலங்களில் பயிரிட விவசாயிகளுக்கு வேளாண்மை இயக்குநர் அறிவுரை கூறினார்.
திருவாடானை அருகே அஞ்சுகோட்டையில் உள்ள விவசாய நிலங்களை வேளாண்மை இயக்குநர் அண்ணாத்துரை ஆய்வு செய்தார். விவசாயிகளிடம் அவர் கூறியதாவது: இப்பகுதியில் 15 எக்டேர் நிலங்களில் தரிசு நிலங்களாக உள்ளன. அந்த நிலங்களில் சாகுபடி செய்து வேளாண் உற்பத்தியை பெருக்க விவசாயிகள் முன்வரவேண்டும். தார்பாய்கள், கைதெளிப்பான்கள், விதைதெளிப்பான்கள் பயனாளிகளுக்கு வழங்கப்படும். தென்னங்கன்றுகள், மரக்கன்றுகள் நட்டு விவசாயிகள் பயன்பெறலாம் என்றார். இணை இயக்குநர் டாம். பி சைலஸ், வேளாண்மை உதவி இயக்குநர் ராஜலட்சுமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!