படியிலிருந்து தவறி விழுந்து ஓய்வு கிராம உதவியாளர் பலி
வந்தவாசி: வந்தவாசி அருகே, மாடி படியிலிருந்து தவறி விழுந்த, ஓய்வு பெற்ற கிராம உதவியாளர் பலியானார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரகாசன், 63. கிராம உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த, 11ல், சந்திரகாசன் தன் வீட்டு மாடி படியில் ஏறினார். அப்போது, கால் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை, உறவினர்கள் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு நேற்று உயிரிழந்தார். வந்தவாசி வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!