dinamalar telegram
Advertisement

திருவண்ணாமலை எஸ்.பி.,க்கு கொரோனா

Share
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் எஸ்.பி., பவன்குமார் ரெட்டி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த வாரம் வந்தவாசி போலீஸ் ஸ்டேஷனில், 10 பேருக்கு கொரோனா ஏற்பட்ட நிலையில், மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும், 100க்கும் மேற்பட்ட போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் எஸ்.பி., பவன்குமார் ரெட்டிக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, தற்போது விடுமுறையில் உள்ளார். கூடுதல் பொறுப்பாக, திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.,யாக, வேலூர் மாவட்ட எஸ்.பி., ராஜேஷ் கண்ணன் கவனித்து வருகிறார்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement