dinamalar telegram
Advertisement

மதுரையில் குடியரசு தின விழா கோலாகலம்

Share
மதுரை : மதுரையில் நேற்று குடியரசுதின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆயுதபடை மைதானத்தில் கலெக்டர்அனீஷ் சேகர் கொடி ஏற்றி போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

அரசு பல்வேறு துறை சார்பில் 78 பயனாளிகளுக்கு ரூ.47 லட்சத்து 22 ஆயிரத்து 94 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 223 காவல் துறை அதிகாரிகளுக்கு முதல்வர்பதக்கம், 69 காவல் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாக பாராட்டு சான்றிதழ், சிறப்பாகபணிபுரிந்த அரசு அலுவலர்கள், சமூகஆர்வலர்கள் 317 பேருக்கு பாராட்டு சான்றிதழ், கேடயங்களையும் கலெக்டர் வழங்கினார். எஸ்.பி.,பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜ்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் அபிதா ஹனீப், ஊராட்சிகளுக்கான உதவி இயக்குனர் செல்லத்துரை, பி.ஆர்.ஓ., சாலிதளபதி, ஏ.பி.ஆர்.ஒ., கயிலைசெல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கொரோனா தடையுத்தரவு காரணமாக கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

பின் ஒவ்வொரு சுதந்திர போராட்ட தியாகிகளின் வீடுகளுக்கும் சென்று கலெக்டர் அவர்களை கவுரவித்தார்.முன்னதாக சுதந்திர போராட்ட தலைவர்களின் தியாகங்களை போற்றும் வகையில் காந்தி மியூசியத்திலுள்ள காந்திசிலைக்கு கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.* மாநகராட்சி அலுவலகத்தில்நடந்த விழாவில் கமிஷனர் கார்த்திகேயன் கொடி ஏற்றினார். மாநகராட்சியில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் உள்ளிட்ட 65 பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை கமிஷனர் வழங்கினார். பூமிநாதன் எம்.எல்.ஏ., நகர் பொறியாளர் அரசு, நகர்நல அலுவலர் ராஜா, உதவி கமிஷனர்கள் தட்சிணாமூர்த்தி, ரவிச்சந்திரன், அமிர்தலிங்கம், சுரேஷ்குமார், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன் கலந்து கொண்டனர்.* தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம்சார்பில் நடந்த விழாவில் சங்க தலைவர் ஜெயப்பிரகாசம் கொடியேற்றினார். சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.* தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் நடந்த விழாவில் சங்க தலைவர் ஜெகதீசன் கொடி ஏற்றினார். நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.* சவுராஷ்டிரா கூட்டுறவு வங்கி சார்பில் வங்கித்தலைவர்சாரதி கொடி ஏற்றினார். வங்கியின்மறைந்த முன்னாள் தலைவர் கோகுல்தாஸ், முன்னாள் எம்.பி.,ராம்பாபுவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. துணைத்தலைவர் சந்திரபிரகாஷ், நிர்வாககுழு உறுப்பினர்கள் ரமேஷ்நாத், வெங்கடேஷ்பாபு, ஹீரா சந்த்பாபு, சித்ரா, பொது மேலாளர் கண்ணன் கலந்து கொண்டனர்.* உலக தமிழ் சங்கத்தில் நடந்த விழாவில் இயக்குனர் லலிதா கொடியேற்றினார். பின் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார். * ரயில்வே கோட்ட நிர்வாகம் சார்பில் கோட்டமேலாளர் பத்மநாபன் அனந்த் ராணுவ உடையில் கொடி ஏற்றி ஆர்.பி.எப்., வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். கூடுதல் கோட்டமேலாளர் ரமேஷ்பாபு, உதவி பாதுகாப்பு கமிஷனர் சுபாஷ்,ஊழியர் நல அலுவலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.* ஆவின் அலுவலகத்தில் பொது மேலாளர் சாந்தி கொடியேற்றினார். துணை பதிவாளர் கணேஷ் முன்னிலை வகித்தார். உதவி பொது மேலாளர்கள் ராமலிங்கம், வேலுச்சாமி, மணிவண்ணன், மேலாளர் (அட்மின்) கலைச்செல்வம் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.* மதுரை நகர் காங்., சார்பில் வடக்கு தொகுதி கடச்சனேந்தல் அந்தநேரியில் மனித உரிமை துறை மாநில பொது செயலாளர்காமராஜ் கொடியேற்றினார். வார்டு தலைவர் வீர வாஞ்சிநாதன் தலைமை வகித்தார். இளைஞர் காங்., நிர்வாகி லட்சுமி, வழக்கறிஞர் முத்துப்பாண்டி, விவசாய அணி தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.* ஆனையூர் கூடல்புதூர் (செக்டார் 6) வீட்டுவசதி வாரியம்.குடியிப்போர் உரிமையாளர்கள்நலச்சங்கம் சார்பில் நடந்த விழாவில் சரளாதேவி கொடியேற்றினார். எல்.ஐ.சி., கண்ணன்தலைமை வகித்தார். பொறுப்பாளர்கள் சுப்பிரமணி, பாபுஜி முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் சின்னராஜ், முத்து, ஜார்ஜ் ரெக்ஸ், பாண்டியராஜ், மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.* சிங்கராயர் நகர் குடியிருப்போர் சங்கத்தில் தலைவர் சென்ராயன் தலைமையில் கொடியேற்றப்பட்டது. நிர்வாகிகள் அப்துல் காதர், முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.* மதுரை நுகர்பொருள் அண்ட் ஷாப் மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் நடந்த விழாவில் செயலாளர் மோகன் முன்னிலையில் தலைவர் குத்தாலிங்கம் கொடி ஏற்றினார். பொருளாளர் இளங்கோவன் வரவேற்றார். நிர்வாகிகள் தமிழ்செல்வன், செல்வம், ஜீவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.* தானம் அறக்கட்டளையில் கொடியை நிர்வாக இயக்குனர் வாசிமலை ஏற்றினார். லண்டன் மாலா மாரீஸ், தானம் மக்கள் கல்வி நிலைய இயக்குனர் ஜானகிராமன், மனிதவள மேம்பாட்டு திட்ட தலைவர்கள் முத்துக்குமாரசுவாமி, இளவரசி, அலுவலர்கள்,சுகம் மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர். கார்த்திகை ராணி நன்றி கூறினார்.* மடீட்சியாவில் நடந்த விழாவில் தலைவர் சம்பத் கொடி ஏற்றினார். மடீட்சியா அறக்கட்டளை தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் ஞானசம்பந்தன், மடீட்சியா முன்னாள்தலைவர்கள் செல்வராஜ், அரவிந்த், செயற்குழு உறுப்பினர்கள்பங்கேற்றனர். பொருளாளர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.* உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நிர்வாக நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா கொடியை ஏற்றினார். மத்திய தொழிலக பாதுகாப்புப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.* மாவட்ட நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி வடமலை கொடி ஏற்றினார். நீதிமன்ற வளாகத்தில் தூய்மை பணி நடந்தது. சீரமைக்கப்பட்ட இலவச கழிப்பறை பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.* கள்ளிக்குடியில் உள்ள சித்தர் கூடம் குழந்தைகள் இல்லத்தில் நடந்த விழாவில் குழந்தைகள் நலக் குழு உறுப்பினர் சண்முகம், மாவட்ட வணிக வரித்துறை அதிகாரி முருகேசன், சித்தர்கூட நிர்வாகி மோதிலால், பணியாளர்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர்.* காந்தி மியூசியத்தில் நடந்த விழாவில் செயலாளர் நந்தா ராவ் தலைமை வகித்தார். பொருளாளர் செந்தில்குமார் கொடி ஏற்றினார். முன்னதாக காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அஸ்தி பீடத்தில் மலரஞ்சலி, சர்வ சமய வழிபாடு, உறுதி மொழி, காந்தியின் மணிமொழிகள் வாசிப்பு நடந்தன.அரசு மியூசிய காப்பாட்சியர் மருது பாண்டியன், கல்வி அலுவலர் நடராஜன், கனரா வங்கி முன்னாள் மேலாளர் வீரப்பன் கலந்து கொண்டனர்.* டவுன்ஹால் ரோடு மாவட்ட சர்வோதய சங்கத்தில் நடந்த விழாவில் செயலாளர் கண்ணன் கொடி ஏற்றினார். தலைவர் முத்துப்பாண்டி, பொருளாளர் ரவிச்சந்திரன், ஊழியர்கள் பங்கேற்றனர்.* அரசு போக்குவரத்து கழகம் தலைமை அலுவலகத்தில்நிர்வாக இயக்குனர் திருவெம்பலம்பிள்ளை கொடியேற்றினார். பொது மேலாளர் இளங்கோவன், துணை மேலாளர்கள் தயாளகிருஷ்ணன், நடராஜன், ரமேஷ், உதவி மேலாளர் (நிர்வாகம்) கலாவதி, உதவி இயக்குனர் செந்தில், மக்கள் தொடர்பு அலுவலர் சந்தானகிருஷ்ணன், தொழிற்சங்க தலைவர்கள் பங்கேற்றனர்.* கோ. புதுார் அரசு போக்குவரத்து கழக கிளை அலுவலகத்தில் மேலாளர் மாரிமுத்து கொடியேற்றினார். சிறப்பாக பணியாற்றிய கண்டக்டர்கள் ராமகிருஷ்ணன், ரமேஷ், டிரைவர் வேல்முருகன், பராமரிப்பு பிரிவு அலுவலர் வேம்புலு ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.* ஜான்சிராணி பூங்கா நேதாஜி சிலை அருகே வி.எச்.பி.,சார்பில் நடந்த விழாவில் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. மாவட்ட தலைவர் சந்திரசேகரன்,துணை தலைவர் கணேசன், பொருளாளர் ரமேஷ்பாபு, அமைப்பாளர் வேலுமணி, நிர்வாகிகள் முருகன், வேல்முருகன் உள்ளிட்டோர் சிலைக்கு மாலையணிவித்தனர்.* வடக்கு மற்றும் கிழக்கு வட்டார கல்வி அலுவலகத்தில் பி.இ.ஓ., எஸ்தர் இந்திராணி கொடியேற்றினார். பி.இ.ஓ., விஜயராஜ் தலைமை வகித்தார்.கண்காணிப்பாளர் பூங்கொடி, உதவியாளர் ரத்னவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.* கடவூர் செசி மையத்தில் அமைதி சங்கம் சார்பில் நடந்த விழாவில் மைய இயக்குனர் ஜில் கார்ட் ஹரிஸ் தலைமையில் டில்லி காந்தி அமைதி நிறுவனத்தின் ஓய்வு பெற்ற நுாலகர் சத்தியநாராயணன் கொடியேற்றினார். ஒருங்கிணைப்பாளர் லலிதா, சங்க தலைவர் சரவணன், செசி நிர்வாகி வினோத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.* தமிழ்நாடு பிராமணர் சங்கம் ஜெய்ஹிந்த்புரம் கிளை சார்பில் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்து கொடி ஏற்றினார். செயலாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். பொருளாளர் சுப்பிரமணியன், துணை தலைவர் ஜெகநாதன், இளைஞரணி செயலாளர் பிச்சுமணி, மகளிரணி செயலாளர் ராஜம்மீனாட்சி, ஆலோசகர்கள்வெங்கட்ராமன், கல்யாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.திருப்பரங்குன்றம்* தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பார்த்திபன் கொடியேற்றினார். மண்டல துணை தாசில்தார் மாதவன், துணை தாசில்தார் ராஜேஷ், ஆர்.ஐ.,க்கள் ராமர், செந்தில்குமார் மற்றும் வி.ஏ.ஒ.,க்கள் பங்கேற்றனர்.* சார்பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் ரமேஷ்பாபு தலைமையில் மூத்த உதவியாளர் முரளிதரன் கொடி ஏற்றினார். பணியாளர்கள் விஷ்வத் பானு, குலாம் பங்கேற்றனர்.* தோப்பூர் ஊராட்சியில் தலைவர் சேகர் கொடியேற்றினார். வார்டு உறுப்பினர்கள், செயலாளர் மும்மூர்த்தி கலந்து கொண்டனர்.* கீழக்குயில்குடி ஊராட்சியில் தலைவர் சுந்தரி கொடியேற்றினார். துணைத்தலைவர் கணபதி, வார்டு உறுப்பினர்கள்,செயலாளர் சரவணகுமார் பங்கேற்றனர்.* ஹார்விபட்டியில் எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம் சார்பில் தலைவர் அய்யல்ராஜ் தலைமையில் செயற்குழு உறுப்பினர் அழகிரி கொடியேற்றினார். நிர்வாகி வேட்டையார் இனிப்பு வழங்கினார். நிர்வாகிகள் அண்ணாமலை, காளிதாசன், மகாலிங்கம்,ஹார்வி மக்கள் நல மைய தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.* ஹார்விபட்டி காங்., சார்பில் மூத்த நிர்வாகி அண்ணாமலை கொடியேற்றினார். நிர்வாகிகள் வெங்கடசாமி, அழகிரி கலந்து கொண்டனர்.திருநகர்* திருநகர் மக்கள் மன்றம்சார்பில் நூலகம் அருகே தலைவர் செல்லா தலைமையில் ஆதித்யா மருத்துவ அறக்கட்டளை துணைத் தலைவர் வெங்கடசாமி கொடியேற்றினார். மன்ற துணை தலைவர் பாக்கியம் வரவேற்றார். நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, கிருஷ்ணமூர்த்தி, பொன் மனோகரன், நாகராஜன், செல்வராஜ், குமார், ராஜேந்திரன், ஓய்வு பெற்ற வணிக வரித்துறை உதவி கமிஷனர் கோட்டைராசு, நல்லாசிரியர் அய்யர், முன்னாள் பேரூராட்சி தலைவர் இந்திரா காந்தி, வரலாற்று ஆய்வாளர் சத்தார் கலந்து கொண்டனர். செயற்குழு உறுப்பினர் வீரக்கண்ணன் நன்றி கூறினார்.திருமங்கலம்* ஆர்.டி.ஓ., அலுவலகத்தில்ஆர்.டி.ஓ., அனிதா கொடி ஏற்றினார். நேர்முக உதவியாளர் மூர்த்தி மற்றும் வருவாய் அலுவலர்கள் பங்கேற்றனர்.* தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன் கொடியேற்றினார். வருவாய் ஆய்வாளர் அருண்குமார் மற்றும்வருவாய் அலுவலர்கள் பங்கேற்றனர்.* நீதிமன்றம் வளாகத்தில் சார்பு நீதிமன்ற நீதிபதி மாரிக்காளை கொடியேற்றினார். நீதிபதிகள் ரேணுகா, ராமசங்கரன், அருண், வழக்கறிஞர்சங்க தலைவர் ராமசாமி, செயலாளர் அறிவொளி, பொருளாளர் ராகவன், மூத்த வழக்கறிஞர் கன்னையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.* தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் ஜெயராணி கொடி ஏற்றினார். நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் டெரன்ஸ் லியோன் கொடியேற்றினார். பொறியாளர் ரத்தினவேலு, சுகாதார ஆய்வாளர்கள் அகமது கபீர், சரவண பிரபு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.* ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் லதா கொடியேற்றினார். துணைத்தலைவர் வளர்மதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர் கைலாசம், சவுந்தரராஜன், கவுன்சிலர்கள் ஓம்ஸ்ரீமுருகன், ஆண்டிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.* பா.ஜ., சார்பில் பசும்பொன்முத்துராமலிங்கத்தேவர்சிலைக்கு மாநில பொது செயலாளர் ஸ்ரீனிவாசன் தலைமையில் மாலையணிவிக்கப்பட்டு, கொடி ஏற்றப்பட்டது. மாவட்ட தலைவர் சுசீந்திரன், பொது செயலாளர் மூவேந்திரன், நிர்வாகி கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.* ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தில் தலைவர் மகபூப்பாட்சா கொடி ஏற்றினார். துணை தலைவர் வெங்கடகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மூத்த நிர்வாகி கண்ணையா குடியரசு தினம் குறித்து விளக்கினார். நிர்வாகிகள் நாகலிங்கம், ஆதிமூர்த்தி, இந்திராணி உள்ளிட்டோர் பேசினர். இணை செயலாளர் எம்.நடராஜன் நன்றி கூறினார். பொருளாளர் பாலகிருஜ்ணன், நிர்வாகி ஜெயந்தி ஏற்பாடுகளை செய்தனர்.* அரசு மருத்துவமனையின் தலைமை டாக்டர் ராம்குமார் கொடியேற்றினார். டாக்டர் மாதவன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.* கிளை நூலகத்தில் தென்றல் லயன்ஸ் சங்க தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். வாசகர் வட்ட தலைவர் சங்கரன், நூலகர் மலர்விழி முன்னிலை வகித்தனர். சங்க ஒருங்கிணைப்பாளர் செல்வம் கொடியேற்றினார்.* ரோஸ் லயன்ஸ் சங்கம் சார்பில் தெற்குத்தெரு காந்திசிலைக்கு பட்டய தலைவர் பால்ராஜ் மாலை அணிவித்தார். தலைவர் சிவராஜன், துணை தலைவர் வைரமுத்து, செயலாளர் திருப்பதி கலந்து கொண்டனர்.அவனியாபுரம்* மதுரை விமான நிலையத்தில் இயக்குனர் பாபு கொடியேற்றினார். தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டர் உமா மகேஸ்வரன் கொடி ஏற்றினார்.வாடிப்பட்டி* நகர் லயன்ஸ் சங்கம் சார்பில் தாதப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைவர் பாலாஜி தலைமை வகித்தார். அரசு வழக்கறிஞர் காந்திராஜ் கொடி ஏற்றினார். செயலாளர் குருசாமி, பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக்குழு தலைவர்மகாலட்சுமி முன்னிலை வகித்தனர். முன்னாள் தலைவர் பொன்னையா வரவேற்றார். தலைமை ஆசிரியை பாலாமணி நன்றி கூறினார்.* அலங்காநல்லுார் காங்., அலுவலகத்தில் தெற்கு வட்டார தலைவர் சுப்பராயலு தலைமை வகித்தார். பொருளாளர் நுார்முகமது கொடி ஏற்றினார். மனித உரிமை துறை தலைவர் ஜெயமணி, வடக்கு வட்டார தலைவர் காந்தி, ஓ.பி.சி., பிரிவு வட்டாரதலைவர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.உசிலம்பட்டி-* ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., சங்கரலிங்கம் கொடி ஏற்றினார். தாசில்தார் விஜயலட்சுமி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.கிளைச்சிறையிலுள்ள கைதிகளுக்கு இனிப்பு வழங்கினர்.* நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் பாஸ்கரன் கொடி ஏற்றினார். சுகாதார ஆய்வாளர்கள் சிவக்குமார், சசிகலா மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.* ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் ரஞ்சனி கொடி ஏற்றினார். மாவட்ட கவுன்சிலர் காசிமாயன், ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.* செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய குழுத்தலைவர் கவிதா ராஜா கொடி ஏற்றினார். ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.* எழுமலை பேரூராட்சியில் செயல் அலுவலர் சிவக்குமார் கொடி ஏற்றினார். அலுவலர்கள் பரமசிவம், செல்லப்பாண்டி நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.* ராஜாக்காபட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் சித்ரா கொடி ஏற்றினார். துணை தலைவர் ஜெயப்பிரியா, 58 கிராம கால்வாய் இளைஞர்கள்சங்க செயலாளர் பால்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மேலுார்* மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி ரம்யா, சார்பு நீதிமன்ற நீதிபதி கணேசன், குற்றவியல் நீதித்துறை நடுவர் ஜெயந்தி, தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் இளமுருகன், போலீஸ் ஸ்டேஷனில் டி.எஸ்.பி., பிரபாகரன், நகராட்சியில் கமிஷனர் ஆறுமுகம், கொட்டாம்பட்டி யூனியன் அலுவலகத்தில் பி.டி.ஓ., செல்லபாண்டியன் கொடி ஏற்றினர்.* நகை மற்றும் அடகு கடை உரிமையாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் தலைவர் ஜெயராஜ் கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.பாலமேடு* பேரூராட்சி அலுவலகத்தில்செயல் அலுவலர் தேவி கொடி ஏற்றினார். இளநிலை உதவியாளர் கிரண்குமார் முன்னிலை வகித்தார். பிளாஸ்டிக் ஒழிப்பு, சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. துாய்மைப் பணியாளர்கள் பங்கேற்றனர்.* அலங்காநல்லுார் பேரூராட்சியில் செயல் அலுவலர் ஜூலான் பானு கொடி ஏற்றினார்.இளநிலை உதவியாளர் அபிதா, வரித்தண்டலர் கண்ணன் பங்கேற்றனர். மரக்கன்றுகள் நடப்பட்டன.* பரவை பேரூராட்சியில் செயல் அலுவலர் பூங்கொடிமுருகு கொடி ஏற்றினார். இளநிலை உதவியாளர் முத்துப்பாண்டி குடிநீர் மற்றும் சுகாதார பணி மேற்பார்வையாளர்கள் சுந்தர்ராஜன், ராமு பங்கேற்றனர்.* சோழவந்தான் பேரூராட்சியில் செயலாளர் சுதர்சன் கொடி ஏற்றினார். இளநிலை உதவியாளர்கள் கல்யாணசுந்தரம், கண்ணம்மாள், சுகாதாரப்பணி மேற்பார்வையாளர் முருகானந்தம் பங்கேற்றனர்.* வாடிப்பட்டி பேரூராட்சியில் செயல் அலுவலர் சண்முகம் கொடி ஏற்றினார். இளநிலை உதவியாளர் தனலட்சுமி மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.* வாடிப்பட்டி நீதிமன்றத்தில் உரிமையியல் நீதிபதி ராம் கணேஷ் கொடி ஏற்றினார். குற்றவியல் நீதிபதி வெங்கடலட்சுமி இனிப்பு வழங்கினார். வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.* எம்.எல்.ஏ., அலுவலகத்தில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., கொடி ஏற்றினார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் பாலராஜேந்திரன், முன்னாள் பேரூராட்சி செயலாளர் பால்பாண்டியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அயூப்கான், அக்ரோ கூட்டுறவு சங்க தலைவர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.* சோழவந்தான் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் சிவபாலன் கொடி ஏற்றினார். தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் பழனிமுத்து கொடி ஏற்றினார். உழவன் உணவகத்தில் நிர்வாகி சேது கொடி ஏற்றினார்.பேரையூர்* குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடுவர் முத்துச்சாமி கொடி ஏற்றினார்.* தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ரவி, டி.எஸ்.பி., அலுவலகத்தில் டி.எஸ்.பி., சரோஜா கொடி ஏற்றினர். போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் காந்தி கொடியேற்றினார்.* பேரூராட்சியில் செயல் அலுவலர் ஜெயதாரா, அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் மகேஷ்குமார் கொடி ஏற்றினர்.டி.கல்லுப்பட்டி* ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் சண்முகப்பிரியா, போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் செல்வம் கொடி ஏற்றினர்.* பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் முகமது ரபிக் கொடி ஏற்றினார். தீயணைப்பு நிலையத்தில் சிறப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் கொடி ஏற்றினார்.* சேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் ஜெயச்சந்திரன் கொடி ஏற்றினார்.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement