dinamalar telegram
Advertisement

ஆக்கிரமிப்புகளை அகற்றகோரி உண்ணாவிரதம்

Share
உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே வடுகபட்டி காலனியில்அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்ட முயற்சி செய்தார். அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து கடந்தாண்டு உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.

ஆனால் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதை கண்டித்து நேற்று காலனி பகுதியினர் உண்ணாவிரதத்தை துவக்கினர். போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் விரைவில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டது.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement