காந்திக்கு பிடித்த பாடல் நீக்கம் ஏன்: அரசு விளக்கம்
இந்த செய்தியை கேட்க

இதில், 1950ல் இருந்து இடம்பெற்று வந்த, 'அபைட் வித் மீ' என்ற பாடல் நீக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்து கவிஞர் ஹென்றி பிரான்சிஸ் லைட் 1847ல் இயற்றிய இந்தப் பாடல், மஹாத்மா காந்திக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.இந்தப் பாடல் தற்போது நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மத்திய அரசு உயரதிகாரிகள் கூறியுள்ளதாவது:நாட்டின் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம்.

நம் சுதந்திர தினம், குடியரசு தின விழாக்களில், நம் நாட்டின் கலாசாரம், பாரம்பரியத்தை உணர்த்தும் நிகழ்ச்சிகள் இடம் பெறுவதே பொருத்தமாக இருக்கும்.'அபைட் வித் மீ'கடந்த 1962ல் சீனாவுக்கு எதிரான போருக்குப் பின், நம் வீரர்களின் பெருமைகளை கூறும் வகையில் கவி பிரதாப் எழுதியுள்ள, 'ஏ மேரே வாதோன் கே லோகோன்' என்ற பாடல் இந்தாண்டு படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சியில் இடம்பெற உள்ளது; இது நம் நாட்டுடன் தொடர்புடையது.நம் நாட்டுடன் தொடர்பில்லாததால் 'அபைட் வித் மீ' பாடல் நீக்கப்பட்டுள்ளது. மஹாத்மா காந்தியை இழிவுபடுத்துவதற்காக செய்யப்படவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து (26)
ஜனகணமண பாடல் பிரிட்டிஷ் அரசரைப் போற்றி எழுதப்பட்ட பாடல் அதுவா தேசபக்தி பாடல்? எந்த🙄 நாட்டிலாவது இந்தக் கொடுமை உண்டா? எது எதற்கோ. போராடும் திராவிஷக் கட்சிகள் ஒரு தமிழ் பாடலை தேசிய கீதமாக அறிவிக்க போராடலாமே ஏராளமான பாரதியார் பாடல்கள் உள்ளனவே
/...
"abide with me" என்பது ஒரு கிறிஸ்தவ பாடல். அதை இந்திய தேச விழாவில் இடம் பெற செய்வது கட்டாயம் என்று இல்லை. இதில் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்குவது மடமை.
இதுகாறும் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தின நிகழ்ச்சி கொண்டாட்டங்கள் நிறைவுற்றபின், 29ம் தேதி முப்படைகள் பாசறைக்குத் திரும்பும் நிகழ்ச்சியின்போது முப்படைகளின் இசைக் குழுவினர் பல பாடல்களை இசைக் கருவிகள் மூலம் வாசிப்பார்கள். இது ஜனாதிபதி மாளிகை முன்பாக நடைபெறும் ஒரு சம்பிரதாயமான நிகழ்ச்சி. இதில் 1950ம் வருடம் முதல் பாடப்பட்டு வந்த 'அபைட் வித் மி' எனும் ஆங்கிலப் பாடல் இந்த வருடம் நீக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடல், ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த ஹென்ரி ஃப்ரான்சிஸ் லயெட் எனும் ஒரு கத்தோலிக்க கவிஞரால் பாடப்பட்ட ஒரு பிரார்த்தனை கீதம் இவர் இயற்றிய பல பாடல்களில் இது மிகவும் சிறப்பானதாகக் கிறிஸ்துவர்களாலும், ஆங்கில இலக்கியவாதிகளாலும் கருதப்படுகிறது. இந்தக் கவிஞர் வாழ்ந்த காலம் 1793 முதல் 1847 வரை. எனவே, இந்தியாவிலிருந்து 1900களுக்கு முன்பாகவும், பிறகும் இங்கிலாந்தில் கல்வி கற்றவர்கள் பலர் இவரது பாடல்களால் கவரப்பட்டனர் என்றால் அது மிகையில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்தில் பல விஷயங்களில் நாம் பிரிட்டிஷாரின் பல நடைவடிக்கைகளைப் பின்பற்றியே நமது குடியரசு ஆட்சியைத் தொடங்கினோம். 'ஜன கண மன' பாடல் நம் தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்ட பின்னரும், ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட சில பல சட்ட விதிகள் இன்னமும் மாற்றப்படாமல் உள்ளன என்பது பாமர மக்கள் பலர் அறிந்திராத ஒன்று. அந்த வகையில் இந்த 'அபைட் வித் மி' எனும் ஆங்கில கிறிஸ்துவத் தோத்திரப் பாடலும் இதுகாறும் பாடப்பட்டு வந்துள்ளது. இது இந்த நிகழ்ச்சிக்கு பொருத்தமற்றது இனி தேவையில்லாதது எனும் முடிவில் மத்திய அரசாங்கம் இதனை நீக்கி அதற்குப் பதிலாக கவி பிரதாப் அவர்கள் இயற்றி லதா மங்கேஷ்கர் அவர்கள் பாடிய 'ஏ மேரே வதன் கே லோகோன்' எனும் ஹிந்திப் பாடல் இந்த வருடம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தப் பாடல் 1962 சீனப் போருக்குப் பின் நம் படை வீரர்களின் தியாகத்தையும், எழுச்சியையும் பறைசாற்றும் விதத்தில் இயற்றப்பட்டும் லதா மங்கேஷ்கர் அவர்களால் ஜவஹர்லால் நேரு அவர்கள் தொடங்கி பல்வேறு தேசியத் தலைவர்கள் முன்னிலையில் பலமுறை மேடைகளில் பாடப்பட்டும் மிகவும் பிரபலமடைந்த, நம் கண்களைக் குளமாக்கும் ஒரு உணர்ச்சி பூர்வமான பாடல். மத்திய அரசின் இந்த முடிவை நாம் வரவேற்போமாக ஜெய் ஹிந்த்
ஜனகண.. பாடல் அங்கிலேயனை போற்றி படப்பட்டதா...இவர் என்ன லூசா. போகட்டும். பல விஷயங்கள் இன்னமும் மேற்கத்தியன் விட்டு விட்டு போனவை தொடர்கின்றன. உதாரணம், பட்டமளிப்பு கவுன், நீதிமன்றங்களில் சில நடை முறைகள் போன்றவற்றையும் ஆராய்ந்து அவைகளையும் களை எடுக்க வேண்டும். மேல் நாட்டு வாடை வீசாத சட்டமன்றம் நம் தமிழக சட்டமன்றம். கேரளாவில் கூட அவ்வாறுதான் என்று நினைக்கிறேன்.