பராமரிப்பு பணிகளுக்காக 35 ஆயிரம் ரயில்கள் ரத்து
இந்த செய்தியை கேட்க
Your browser doesn’t support HTML5 audio
புதுடில்லி-நடப்பு 2021 - 2022 நிதிஆண்டில் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் பராமரிப்பு பணிகளுக்காக 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திர சேகர் கவுர், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட கேள்விகளுக்கு, ரயில்வே அமைச்சகம் அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் பராமரிப்பு பணிகளுக்காக 35,026 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்தாண்டு ஏப்., - ஜூனில் 20 ஆயிரத்து 941 ரயில்களும், ஜூலை - செப்.,ல் 7,117 ரயில்களும், அக்., - டிச., மாதங்களில், 6,869 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.நீண்ட காலமாக ரயில் பாதைகள் பராமரிப்பு பணிகள் நடைபெறாமல் இருந்தன. கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவல் காலத்தை பயன்படுத்தி தண்டவாளங்கள் பராமரிப்பு வேகப்படுத்தப்பட்டது. அதனால் அதிக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்படுகிறது.
வாசகர் கருத்து (5)
தமிழ்நாடு மின்வாரியத்தை பார்த்து எ அப்பட்டமாக காப்பி அடிக்கிறார்கள். இங்கதான் கரெண்டே வராத காலத்திலும் வாரத்திற்கு இரண்டு முறை பராமரிப்பு பணி நடக்கிறது.
மக்களின் வரிப்பணத்தில் பராமரித்தபின் தனியாருக்கு தாரை வார்க்கப்படும்.
பராமரித்து தனியாருக்கு தாரை வார்த்து கொடுக்கவா ......லோட்ட ஸ் ...லூட்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
தினமும் ஒரு புது ரயிலு விடச்சொல்லி போராட்டம் நடத்துபவர்கள் பாதுகாப்பு அம்சங்களை முதலில் சரி செய்துவிட்டு பின்னர் புது ரயிலுக்கு கோரிக்கை🙄🤔 விடலாமே. பாதுகாப்பில்லாத பயணம் நமக்கெதற்கு?