பொள்ளாச்சி:தமிழக அரசு கொரோனா பரவலை குறைக்க, ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு பிறப்பித்திருந்தது. அதே சமயம், மருந்துக்கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.அதன் அடிப்படையில், ஓட்டல்களில், வாடிக்கையாளர்களுக்கு 'பார்சல்' சேவை மட்டும் வழங்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பொள்ளாச்சியில் 'ஆன்லைன்' வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு உணவு கொண்டு சேர்க்கும் சேவை மேற்கொள்ளும் 'ஸ்விகி', 'ஸொமோட்டோ', 'பிளையர் ஈட்ஸ்' உள்ளிட்ட நிறுவனங்கள் சேவை வழங்குகின்றன.அந்நிறுவனங்களில், நுாற்றுக்கணக்கான 'டெலிவரி பாய்ஸ்' வாடிக்கையாளர்கள் 'ஆன்லைன்' வாயிலாக கேட்கும் உணவுகளை, அவர்களது முகவரிக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு, அரசு உத்தரவுப்படி சென்று வர போலீசார் அனுமதி அளிக்கின்றனர்.நேற்று மதியம் பொள்ளாச்சி நகர ரோடுகளில் ஊரடங்கால், உணவு சேவை நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்கள், ரோடெங்கும் இரு சக்கர வாகனங்களில் பயணிப்பதை காண முடிந்தது.பிரபலாமான உணவு சேவை நிறுவன பணியாளர் ஒருவரிடம் கேட்ட போது, ''வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ உணவுகளுக்கான 'ஆர்டர்கள்' அதிகம் இருப்பது இயல்பு தான். ஆனால், ஊரடங்கு நாளான இன்று (நேற்று) இறைச்சிக்கடைகளுக்கு அனுமதி இல்லாததால், மக்கள் எங்கள் வாயிலாக அசைவ உணவுகளை அதிகம் 'ஆர்டர்' செய்துள்ளனர். இது, வழக்கமான ஞாயிற்றுக்கிழமைகளை விட, 100 சதவீதம் அதிகம். இதனால், ஓய்வின்றி உணவு 'டெலிவரி' பணியில் ஊரடங்கு நாளில் ஈடுபட்டுள்ளோம்,' என்றனர்.
ஆன்லைன் ஆர்டரில் அசைவ உணவுகள்: ஊரடங்கு நாளில் விற்பனை ஜோர்!
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!