நடமாடும் காய்கறிக்கடை துவங்க வலியுறுத்தல்
வால்பாறை:வால்பாறை பகுதியில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கூறியதாவது: வால்பாறையில் தேயிலை தொழில் முக்கியமானதாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை தவிர, பிற நாட்களில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடுகிறோம். குறைவான சம்பளத்தில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.வால்பாறையில் சந்தை நாளான, ஞாயிற்றுக்கிழமை நாளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், தொழிலாளர்கள் காய்கறிகளை வாங்கிச்செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.எனவே, நகராட்சி சார்பில் அன்று எஸ்டேட் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில், மலிவு விலையில் நடமாடும் காய்கறிக்கடை வாயிலாக, விற்பனை செய்ய வேண்டும் என்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!