ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு, மூலிகை நாற்றுப்பண்ணையில், மக்கள் வீடுகளில் வளர்க்க மூலிகை நாற்றுகள் மற்றும் விளைநிலங்களில் வளர்க்க மூங்கில் நாற்றுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் ஆழியாறு, முக்கிய சுற்றுலா பகுதியாக உள்ளதால் தினமும், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.சுற்றுலா பயணிகளுக்கு மூலிகைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், மக்களிடையே மூலிகை நாற்றுகள் வளர்ப்பை ஊக்குவிக்கவும், ஆழியாறு வனத்துறை சோதனைச்சாவடி அருகில், கோவை வன மரபியல் மண்டலம், வன ஆராய்ச்சி பிரிவு சார்பில், மூலிகை பண்ணை அமைக்கப்பட்டது.இங்கு தற்போது, மக்கள் வீடுகளில் வளர்க்க மூலிகை நாற்றுகள் மற்றும் விளைநிலங்களில் வளர்க்க மூங்கில் நாற்றுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மக்கள், விவசாயிகள் பெற்றுக்கொள்ள அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி வனத்துறை ஆராய்ச்சி வனச்சரக அலுவலர் கார்த்திகேயன் கூறியதாவது:தற்போது, சந்தனம், பிரம்பு, கருநொச்சி, முறிகூட்டி, தொழுகன்னி முருங்கை, காட்டுமல்லி, காட்டு இஞ்சி உள்பட, 200 வகையான மூலிகை நாற்றுகள் வளர்க்கப்பட்டு வருகிறது.ஒரு நாற்று, 10 - 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், விவசாயிகளுக்கு வழங்குவதற்காக, பத்தாயிரம் மூங்கில் நாற்றுகள் இருப்பில் உள்ளன. தோப்புகளில் பயன்படாத இடங்களில் மூங்கில் வளர்க்கலாம்.சில ஆண்டுகள் கழித்து அதை வெட்டி விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். மூங்கில் வளர்க்க தண்ணீர், உரம் உள்பட எந்தச்செலவும் இல்லை. ஆழியாறு மூலிகை நாற்றுப்பண்ணையில் காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை, வாரம் முழுவதும் மூலிகை நாற்றுகளை பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு, தெரிவித்தார்.
மூங்கில் நாற்றுகள் இருப்பு: விவசாயிகளுக்கு அழைப்பு
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!