dinamalar telegram
Advertisement

நகராட்சித்தலைவர் பதவிக்கு தி.மு.க.,வில் கடும் போட்டி

Share
வால்பாறை:வால்பாறை நகராட்சித்தலைவர் பதவிக்கு தி.மு.க., சார்பில் போட்டியிட கட்சியினர் மத்தியில் பலத்த போட்டி உருவாகியுள்ளது.வால்பாறை நகராட்சியில் மொத்தம், 21 வார்டுகள் உள்ளன. இது வரை நடந்த தேர்தலில், அ.தி.மு.க., ஒரு முறையும், தி.மு.க., மூன்று முறையும் தலைவர் பதவியை தக்க வைத்துள்ளது.தற்போது நகராட்சியில் பெரும்பாலான வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த முறை தலைவர் பதவி பெண் (பொது) ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது.கடந்த மூன்று முறை தலைவர் பதவியை, தி.மு.க., தக்க வைத்துக்கொண்டது. ஒரு முறை மட்டும் தலைவர் பதவி அ.தி.மு.க., வசமானது.இந்நிலையில், இந்தமுறை பெண்களுக்கு சீட் ஒதுக்கப்பட்டதால், எப்படியும் ஈசியாக வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தில், தி.மு.க., வினர் போட்டி போட்டுக்கொண்டு தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்துள்ளனர்.வால்பாறை நகராட்சியில் மொத்தம் உள்ள, 21 வார்டுகளில் போட்டியிட தி.மு.க.,வில், 64 பேர் மனு செய்துள்ளனர்.தலைவர் பதவிக்கு மாஜி நகராட்சித்தலைவர்கள், கவுன்சிலர்கள், படித்த பட்டதாரிகள் போட்டி போட்டு சீட் கேட்டுள்ளனர்.வால்பாறை நகராட்சித்தலைவர் பதவி, வார்டு இன ஒதுக்கீட்டு அடிப்படையில் பெண்களுக்கு ஓதுக்கீடு செய்ததை தொடர்ந்து, தி.மு.க.,வில் தலைவர் பதவியை தக்க வைத்துக்கொள்ள இப்போதே கடும் போட்டி நிலவுகிறது.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement