dinamalar telegram
Advertisement

வரும் வாரத்தில் வறண்ட வானிலை

Share
கோவை:வரும் ஐந்து நாட்கள் வறண்ட வானிலை நிலவும் என, வேளாண் பல்கலையின் காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.வேளாண் காலநிலை ஆராயச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த வாரம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், வறண்ட வானிலையே நிலவியது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த வாரம் மழைப்பொழிவு இல்லை. அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்கு மண்டல மாவட்டங்களில், வறண்ட வானிலையே நிலவும். கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். வரும் வாரத்தில் அதிகபட்ச வெப்பநிலை, 31 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.காற்றின் வேகம், 4 கி.மீ., வரை இருக்கும். வறண்ட வானிலை இருக்கும் என்பதால், அனைத்து பயிர்களுக்கும் மண் ஈரத்தினை பொறுத்து நீர் பாசனம் செய்யலாம். கோமாரி நோய் உஷார்தற்போதைய வானிலையால் கால்நடைகளுக்கு கோமாரி நோய் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement