ஊரடங்கை மீறியோரிடம் ரூ. 15,500 அபராதம்
அன்னுார்:ஊரடங்கு தடையை மீறியவர்களுக்கு, 15, ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.அன்னுாரில், நேற்று ஊரடங்கை மீறி, சோமனுார் பிரிவில் ஒரு பேக்கரி செயல்பட்டது. வருவாய் ஆய்வாளர் சங்கர்லால் அபராதம் விதித்தபோது, அபராதம் செலுத்த மறுத்த பேக்கரி உரிமையாளர், வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதையடுத்து வருவாய்த் துறையினர், அன்னுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு சென்று, எச்சரித்து, அபராதம் விதித்தனர்.குன்னத்துார், கரியாம்பாளையம், மசக்கவுண்டன் செட்டிபாளையம், பகுதியில் முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளி பின்பற்றாதோரிடம் 10 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. அன்னுார் போலீசார், முகக்கவசம் அணியாதோர் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றாதோரிடம் 5,000 ரூபாய் அபராதம் வசூலித்தனர்.நேற்று பல்வேறு காரணங்களை கூறி இரு சக்கர வாகனங்களில், ஏராளமானோர் வெளியே சுற்றினர். போலீசாரும் வருவாய் துறையினரும் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.தனியார் மருத்துவமனைகளில் நேற்றும் கூட்டம் அலைமோதியது.பெ.நா.பாளையம்பெரியநாயக்கன்பாளையத்தில் முகக்கவசம் இன்றி, பொது இடங்களில் நடமாடிய, 120 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் செல்லும் நபர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த அபராதம், 200 ரூபாயிலிருந்து, 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.பெ.நா.பாளையம் போலீசார், கடந்த சில நாட்களாக நடத்திய சோதனையில், முகக்கவசம் அணியாமல், பொது இடங்களில் நடமாடிய, 120 பேர் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களிடம் தலா, 500 ரூபாய் என, 60 ஆயிரம் ரூபாயை அபராதமாக வசூலித்தனர்.தொடர்ந்து சோதனை நடத்தப்படும். விதிமீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் எச்சரித்துள்ளனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!