பணம் வைத்து சூதாடிய13 பேர் கைது
சூலுார்:சுல்தான்பேட்டை, கருமத்தம்பட்டி பகுதிகளில், பணம் வைத்து சீட்டு விளையாடிய 13 பேரை போலீசார் கைது செய்தனர்.-சுல்தான்பேட்டை அடுத்த வதம்பச்சேரி பெரிய கால்வாய் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடிய, சுப்பிரமணி, சுரேஷ்குமார், கண்ணன், உதயசூரியன் ஆகிய நான்கு பேரை கைது செய்து, 2,050 ரூபாயை பறிமுதல் செய்தனர்.இதேபோல், பெரிய வதம்பச்சேரி பகுதியில் ரோந்து சென்ற போலீசார், பணம் வைத்து சீட்டு விளையாடிய பாலசுப்பிரமணி, சந்திரகுமார், ராமலிங்கம், ஆனந்தகுமார் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 2,270 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.கருமத்தம்பட்டி அடுத்த, குறுக்கபாளையம் சுல்தான்தோட்டத்தில், போலீசார் சோதனை நடத்தினர். இதில், பணம் வைத்து சீட்டு விளையாடிய, திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த முத்துராஜ், 50; செந்தில்குமார்,41; சம்பத்குமார்,38; முரளி, 50; பாஸ்கர், 51 ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, ரூ.850 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!