மது விற்ற மூவர் கைது
சூலுார்:சூலுார் போலீசார், கங்கயம்பாளையம் பகுதியில் நேற்று ரோந்து சென்றார். அப்போது, சட்டவிரோதமாக மது விற்ற, நாகராஜன், 39, என்ற நபரை கைது செய்து, 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்.இதேபோல், சுல்தான்பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, மின் வாரிய அலுவலகம் அருகில் மது விற்ற கார்த்திகேயன், 38, என்பவரை கைது செய்து, 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.செலக்கரச்சல் டாஸ்மாக் கடை அருகே உள்ள குட்டையில் மது விற்ற, அரியலுார் மாவட்டத்தை வினோத்குமார், 28 கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து, 36 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!