dinamalar telegram
Advertisement

போளூர் கிளைச்சிறையில் 10 பேருக்கு கொரோனா

Share
போளூர்: போளூர் கிளைச்சிறையில், 10 பேர் கொரோனா தொற்றால் பாதித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், கலசப்பாக்கம் அடுத்த வீரளூரில், கடந்த, 16ல் இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில், 21 பேர் கைது செய்யப்பட்டனர். போளூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் ஒன்பது பேருக்கும், ஏற்கனவே திருட்டு வழக்கில் கைதான ஒருவர் என மொத்தம், 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement