dinamalar telegram
Advertisement

அரசு ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு

Share
ஆரணி: ஆரணி அருகே அரசு ஊழியர் வீட்டில், 20 பவுன் நகையை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கஸ்தம்பாடியை சேர்ந்தவர் சிவப்பிரகாசம், 44, கரிகாத்தூர் பஞ்., செயலாளர்; இவரது மனைவி பவானி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இருவரும் பணிக்கு சென்று விட்டனர். இவர்களது, 13 மற்றும் 15 வயது இரு மகன்கள் பவானியின் தாயார் வீட்டிற்கு சென்று விட்டனர். பணி முடிந்து இரவு வீடு திரும்பிய சிவப்பிரகாசம், வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவிலிருந்த, 20 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் 17 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரிந்தது. புகார்படி களம்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement