dinamalar telegram
Advertisement

மனநலம் பாதித்த நாடக நடிகை காப்பகத்தில் சேர்க்கப்படுவாரா?

Share
புதுக்கோட்டை: வறுமை காரணமாக, நாடக நடிகை ஒருவர் மன நோயாளியாக மாறி, சாலைகளில் சுற்றித் திரிகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே மணவாளன் கரையைச் சேர்ந்தவர் மாரியம்மாள், 50. இவர், சிறு வயதிலேயே, புதுக்கோட்டை நாடக நடிகர் சங்கத்தில் சேர்ந்து, வள்ளி திருமணம், அரிச்சந்திர மயான காண்டம், பவளக்கொடி, அர்ஜுனன் தபசு, முத்தப்பன் போன்ற பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார். அரசு விருதுகள் பெற்று, மேடை நாடக நடிகர்களில் பிரபலமாக இருந்த மாரியம்மாளுக்கு, நாடகத் தொழில் முடக்கமாகி, வாழ்வாதாரம் பாதித்ததால் மனநலமும் பாதித்தது. குடும்பப் பிரச்னையால், வீட்டை வீட்டு வெளியேறிய அவர், கிழிந்த அழுக்கான உடையுடன், தடி ஊன்றியபடி சாலைகளில் செல்வோரிடம் கையேந்தித் திரிகிறார். 'தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம், அவரை காப்பகத்தில் தங்க வைத்து, சிகிச்சை அளிக்க வேண்டும்' என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement