புதுக்கோட்டை ரயில்வே குட்ஷெட்டில் கொட்டி கிடக்கும் நெல் மூட்டைகள்
புதுக்கோட்டை: புதுக்கோட்டைக்கு ரயிலில் கொண்டு வரப்பட்ட நெல் மூட்டைகள், குட்ஷெட்டில் கொட்டிக் கிடப்பதால், பொதுமக்களும், விவசாயிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், ரயில் மூலமாக புதுக்கோட்டைக்கு கொண்டு வரப்பட்டன. இந்த நெல் மூட்டைகள், நேற்று புதுக்கோட்டை மற்றும் காரைக்குடி பகுதியில் உள்ள அரிசி ஆலைகளுக்கு, அரவைக்காக லாரிகளில் அனுப்பப்பட்டன. அவற்றில் பல நெல் மூட்டைகள், ரயில்வே குட்ஷெட் பகுதியில் கேட்பாரற்று கொட்டிக் கிடந்தன. ரயிலில் வந்த நெல் மூட்டைகள் பிரிந்து இருந்ததாகவும், அந்த மூட்டைகளை திரும்ப தைத்து, லாரியில் ஏற்று மாறும் அதிகாரிகள் கூறியுள்ளனர். அதற்கு, வாடகை அதிகமாக கேட்ட லாரி டிரைவர்கள், பிரிந்து இருந்த நெல் மூட்டைகளை எடுத்துச் செல்லாமல், குட்ஷெட் பகுதியில் போட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து விளைவித்த நெல் மூட்டைகள், கேட்பாரற்று கொட்டிக் கிடப்பதை பார்த்த பொது மக்களும், விவசாயிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!