அரசு ஊழியர் வீட்டில் 20 சவரன் நகை திருட்டு
ஆரணி : ஆரணி அருகே அரசு ஊழியர் வீட்டில், 20 சவரன் நகையை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆரணி அடுத்த கஸ்தம்பாடியை சேர்ந்தவர் சிவப்பிரகாசம், 44; கரிகாத்துார் பஞ்., செயலாளர். இவரது மனைவி பவானி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இருவரும் பணிக்கு சென்று விட்டனர்.இவர்களது, இரு மகன்கள் பவானியின் தாயார் வீட்டிற்கு சென்று விட்டனர். பணி முடிந்து இரவு வீடு திரும்பிய சிவப்பிரகாசம், வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவிலிருந்த, 20 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் 17 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரிந்தது. களம்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!